Home சினிமா கோலிவுட் 21 நாட்கள் ஓடவும், ஒளியவும் முடியாது: பிக் பாஸ் இல்ல: நடிகர் அப்பாஸ்!

21 நாட்கள் ஓடவும், ஒளியவும் முடியாது: பிக் பாஸ் இல்ல: நடிகர் அப்பாஸ்!

361
0
Actor Abbas

Abbas; 21 நாட்கள் ஓடவும், ஒளியவும் முடியாது: பிக் பாஸ் இல்ல: நடிகர் அப்பாஸ்! கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவருமே வீட்டில் இருக்கும் நிலையில், இது பிக் பாஸ் நிகழ்ச்சி இல்ல, பிக் வேர்ல்டு ரியாலிட்டி ஷோ என்று நடிகர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் அல்ல…பிக் பிரதர் அல்ல… பிக் வேர்ல்டு ரியாலிட்டி ஷோ என்று நடிகர் அப்பாஸ் (Actor Abbas) தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலே இருப்பது பற்றி நடிகர் அப்பாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை வந்துவிட்டது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எங்கிருந்து வந்ததோ, அங்கு சகஜ நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அப்பாவி ஜனங்கள் ஒருபக்கம், சகட்டுமேனிக்கு வீடியோ வெளியிட்டு வரும் பிரபலங்கள் ஒரு பக்கம்.

இந்த நிலையில், நியூசிலாந்தில் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நடிகர் அப்பாஸ் (Actor Abbas) தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

அனைவருமே அவரவர் வீட்டில் முடங்கியிருக்கும் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ இதுதான். பிக் பாஸ் அல்ல, பிக் பிரதர் அல்ல, பிக் வேர்ல்டு ரியாலிட்டி ஷோ. வீட்டிலேயே இருங்கள்.

இது ஒன்றும் நாடகம் இல்லை. இது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here