Home சினிமா கோலிவுட் குஷியில் விஜய்க்கு நண்பனாக நடித்த ஷாம் பர்த்டே டுடே!

குஷியில் விஜய்க்கு நண்பனாக நடித்த ஷாம் பர்த்டே டுடே!

341
0
Shaam Birthday

Shaam Birthday; குஷி படத்தில் நடித்த ஷாம் பர்த்டே டுடே! விஜய் நடிப்பில் வந்த குஷி படத்தின் மூலம் அவரது நண்பராக நடித்த ஷாம் இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் ஷாம் இன்று தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர் நடிகர் ஷாம். இவரது இயற்பெயர் ஷாம்சுதீன் இப்ராஹீம்.

பிகாம் படித்துள்ள ஷாம், பெங்களூரில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு நடிப்பில் இருந்த ஆர்வத்தால் கிட்டத்தட்ட 4 வருடம் சினிமா வாய்ப்பு தேடி அழைந்தார்.

ஷாமிற்கு மாடல் உதவியாளராக இருந்த பிஜூ ஜெயதேவன் உதவியுடன் ஒளிப்பதிவாளர் ஜீவாவை சந்தித்தார். இயக்குநராக அறிமுகமாக புதுமுக நடிகரை அவர் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் ஷாம் அவரிடம் வந்தார்.

அப்போது தான் ஜீவா இயக்கத்தில் ஷாம் நடிப்பில் 12பி படம் திரைக்கு வந்தது. இதுதான் ஷாமின் முதல் தமிழ் படம். ஆனால், இப்படத்திற்கு முன்னதாகவே விஜய் நடித்த குஷி படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

12பி கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஷாமிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, பாலா, அன்பே அன்பே, லேசா லேசா, இயற்கை, கிரிவலம், உள்ளம் கேட்குமே, ஏபிசிடி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்தாண்டு காவியன் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தவிர, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

கல்லூரி தோழியான பஞ்சாபியைச் சேர்ந்த காஷிஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சமைரா மற்றும் கீரா என்று இரு மகள்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் காரணமாக நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷாம் சார்…

SOURCER SIVAKUMAR
Previous articleவலிமையுடன் இருக்க வேண்டும்: ஜாக்கி சான் வேண்டுகோள்!
Next articleயார் இவர்கள் இணையத்தை கலக்கி வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here