Home சினிமா கோலிவுட் கொரோனா உடன் பேசும் நடிகர் சிவா: வைரலாகும் வீடியோ!

கொரோனா உடன் பேசும் நடிகர் சிவா: வைரலாகும் வீடியோ!

390
0
Shiva Speak With Corona Virus

Shiva Corona Video; கொரோனா உடன் பேசும் நடிகர் சிவா: வைரலாகும் வீடியோ! நடிகர் சிவா கொரோனா உடன் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவா வீட்டில் இருந்தபடி கனவில், கொரோனா உடன் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உலகத்தையே ஆட்டி வைத்தது கொரோனா வைரஸ்.

சீனாவில் தொடங்கி, தென் கொரியா, இத்தாலி, ஈரான், சிங்கப்பூர், அமெரிக்கா என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளைக் கடந்து இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் 27 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைவருமே சமம் என்ற நோக்கில் உயர்ந்தவர் முதல் தாழ்ந்தவர் வரை அனைவருமே வீட்டில் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும் சிலர், களத்தில் இறங்கி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சிவா தனக்கே உரிய பாணியில் நக்கல், நய்யாண்டி பாணியில் கொரோனா உடன் பேசும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ பேசிக்கொண்டிருந்த படி தூக்கத்தில் இருந்து எழுந்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, வீட்டில் சும்மாவே இருப்பதால், கனவில் கூட கொரோனா வைரஸ் தான் வருகிறது என்பது போன்று அந்த வீடியோ காட்டப்பட்டுள்ளது.

கொரோனா உடன் சிவா பேசுகையில், வைரஸுக்கு கை கொடுத்துவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டு வணக்கம் என்கிறார்.

ஏன், எதற்காக நாங்கள் அப்படி என்ன தவறு செய்தோம்? புரியுது உன்னுடைய மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

யாரோ எங்கியோ தவறு செய்ததற்காக இப்படி எல்லோருமேவா? உலகம் முழுவதுமேவா? போதும் உன்னைப் பார்த்தால் ஒழுக்கமாக தெரிகிறது. ஒரு கியூட்னெஸ் இருக்கு அப்படி சொல்லும் போது கொரோனா சிரிக்கிறது.

சரி, இனிமேல் நாங்கள் எல்லோருமே வீட்டில் இருப்போம். தேவையில்லாமல் ஸ்டைலா ஊர் சுற்ற மாட்டோம். முக்கியமாக சுத்தமாக இருப்போம்.

இறுதியாக இந்த உலகத்தில் உண்மையான அன்பு மட்டும் தான் எப்போதும் காப்பாற்றுவோம். நாங்கள் அனைவரும் அன்பாக, ஒற்றுமையாக இருப்போம்.

தயவு செய்து வந்த வேகத்திலேயே போய்விடு, போய்விடு என்று தூக்கத்தில் உளறுகிறார்.

மேலும், எவ்வளவு மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என்று அனைவரும் இரவு பகலாக பணியாற்றுகிறார்கள்.

ப்ளீஸ் கோ கொரோனா… கோ கொரோனா…அப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போது அவரது அம்மா என்று நினைக்கிறோம். டே சிவா எழுந்தாச்சா…

யார் கூட பேசிக்கிட்டு இருக்க…குப்ப போடணும், வீட பெருக்கணும், பாத்திரம் கழுவனும் எல்லாமே அப்படியே இருக்கு பாரு…சீக்கிரம் சீக்கிரம் என்று பேசுகிறார்.

இதற்கு எந்த பதிலும் பேசாமல் அப்படியே பெட்சீட்டை மூடி படுத்து தூங்குகிறார். இதோடு, அந்த வீடியோவும் முடிகிறது.

இதுவரை எத்தனையோ பிரபலங்கள் பதிவிட்ட வீடியோக்களில் இந்த வீடியோ கொஞ்சம் நக்கலாகவும், நய்யாண்டியாகவும், காமெடியாகவும் இருக்கிறது.

பொதுவாகவே நடிகர் சிவா படங்கள், காமெடி, நக்கல், நய்யாண்டி என்று எல்லாமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleநாம் இருவர் நமக்கு இருவர் – மாயனா? டாக்டரா?
Next articleBSNL LATEST PLAN: 600 GB யா? அடடே அற்புதம்.. ஆனா டேஸ் கம்மி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here