Vivek என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க? அஜித், விஜய் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்! முன்னணி நடிகர்களாக திகழும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு விவேக் டுவிட்டர் மூலமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.
குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கவுடண்மனி, செந்தில் ஆகியோரது காமெடி வரிசையில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தவர் நடிகை விவேக்.
சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். கிரீன் கலாம் என்ற அமைப்பு மூலமாக நாடு முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வருகிறார்.
மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில், உலகையே உலுக்கிய கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில், டிஆர்பியை எகிற வைப்பதற்காக சேனல்கள் விஜய், அஜித் படங்களை அடிக்கடி தங்களது சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.
எப்போதெல்லாம், அஜித், விஜய் படங்கள் திரையில் மட்டுமல்ல, சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறதோ, அப்போதெல்லாம், விஜய், அஜித் ரசிகர்கள் சம்பந்தப்பட்ட படத்தை ஹேஷ்டேக் போட்டு டுவிட்டரில் டிரெண்டாக்குகின்றனர்.
அதோடு இல்லாமல், அஜித் பற்றி விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், விஜய் பற்றியும் அவரது படம் குறித்து அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும் காலங்காலமாக நடந்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையில் போட்டியும், மோதலும் நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் பதிவிடும் டுவிட்டுகளில் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளையும் டேக் செய்து டுவிட் பதிவிடுகின்றனர்.
இதே போன்று நடிகர் விவேக்கிற்கும் டேக் செய்து டுவிட் பதிவிட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த விவேக், அஜித், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை.
தயவு செய்து இது போன்ற பதிவுகளில் என்னை டேக் செய்ய வேண்டாம். அதையும் மீறி செய்தால் பிளாக் செய்யப்படுவீர்கள். எனது டுவிட்டரை நான் நேர்மறைப் பதிவுகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தனியாக இருக்கும் விவேக் பாடல்களுக்கு ஆர்மோனியம் வாசித்து தனிமையில் இனிமை கட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.