Suriya Aruvaa; அருவா பிரச்சனையே முடியல: அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா? சூர்யாவின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று (Soorarai Pottru) படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
எனினும், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) தீவிரமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு படங்களின் ரிலீஸ் தேதியும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியுள்ள இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து சூரயவின் 39 ஆவது படம் குறித்து அண்மையில் அறிவிப்பு வந்தது. இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்க இருப்பதாவும், படத்திற்கு அருவா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாவும், ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்க இருப்பதாவும் அறிவிப்பு வந்தது.
அருவா படத்தின் தலைப்பு வெளியானதுமே படம் பிரச்சனையில் சிக்கியது. ஆம், அருவா தலைப்பை வைத்து பாடலாசிரியர் ஏகாதசி கதை உருவாக்கியிருப்பதாவும், இந்தப் படத்தை கோபி தயாரித்துள்ளதாகவும் தகவல் வந்தது.
ஆனால், இது குறித்து இயக்குநர் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகவில்லை. அருவா படத்தைத் தொடர்ந்து சூர்யா40 படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க இருக்கிறார்.
இப்படத்திற்கு வாடி வாசல் என்று ஏற்கனவே தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது சூர்யா41 படம் குறித்து அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, அசோக் செல்வன் நடிப்பில் வந்த ஆயிரத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.
இருளர் பழங்குடியினர் மற்றும் அவர்களது வாழ்க்கை போராட்டங்களை மையப்படுத்தி சூர்யா41 படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு, இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்க இருக்கிறார் என்கிறது தகவல்.