அஜித் அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சில வருடங்களுக்குமுன் அஜித், அதிமுக கட்சியில் இணையப்போகிறார். ஜெயலலிதாவிற்கு பிறகு அஜித் அதிமுகவை வழிநடத்தப்போகிறார்.
அஜித்தை அரசியலில் ஈடுபடவைக்க ‘சோ’ போச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியது.
அந்த நேரத்தில், அஜித் எந்த ஒரு லெட்டர்களும் வெளியிடவில்லை. ஆனால் தற்பொழுது தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த லெட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அஜித் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
அதேவேளை இன்று அவர் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக லெட்டர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித் தான் நடிக்க மட்டுமே வந்துள்ளேன். அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. என்னுடைய எண்ணத்தை நான் யார் மீதும் திணிக்க மாட்டேன்.
ரசிகர்கள் எந்த அரசியல் கட்சிகளுடனும் இணைத்து என்னுடைய புகைப்படத்தை வெளியிடக்கூடாது.
மேலும், சமூக அக்கறையுடன், சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என லெட்டர் வெளியிட்டுள்ளார்.
அஜித் வெளியிட்டுள்ள லெட்டர் கீழே இணைக்கப்பட்டுள்ளது.