Home சினிமா கோலிவுட் Valimai: வைரலாகும் வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்!

Valimai: வைரலாகும் வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்!

366
2
Valimai Shooting Spot Pictures

Valimai, Ajith வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வலிமை (Valimai) படத்தில் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது.

போலீஸ் கதையை மையப்படுத்திய வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மற்ற நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இதுவரை வலிமை படம் குறித்து எந்த அப்டேட்டும், படப்பிடிப்பு புகைப்படங்கள், வீடியோ என்று வெளியாகவில்லை. ஒரு சமயத்தில் அஜித்திக்கு பைக் ரேஸின் போது காயம் ஏற்பட்ட கட்டத்தில் வீடியோ வெளியானது. ஆனால், இதைத் தவிர வேறு எந்த புகைப்படமும் வெளிவரவில்லை.

Valimai Shooting Spot Pictures

இந்த நிலையில், தற்போது வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், இயக்குநர் ஹெச் வினோத் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

சென்னை மீஞ்சூர் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் வலிமை படத்தின் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில், பைக் ரேஸ்க்காக அஜித் பயன்படுத்தும் பைக் என்று ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது.

வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்

வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், டுவிட்டரில் வலிமை, அஜித், ஹெச் வினோத் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தின திதி நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வலிமை படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleவிராட் கோலி-யின் “ஈ சாலா கப் நமதே” நிஜமாகுமா?
Next articleValimai Shooting Spot Video; தல அஜித் மாஸ் காட்டும் பைக் ரேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here