Home சினிமா கோலிவுட் மகளோடு சைலண்ட் செல்ஃபி எடுத்த ஆல்யா மானசா: வைரலாகும் புகைப்படம்!

மகளோடு சைலண்ட் செல்ஃபி எடுத்த ஆல்யா மானசா: வைரலாகும் புகைப்படம்!

464
0
Alya Manasa Selfie With Her Daughter

Alya Manasa; மகளோடு சைலண்ட் செல்ஃபி எடுத்த ஆல்யா மானசா: வைரலாகும் புகைப்படம்! ஆல்யா மானசா தனது மகளோடு செல்ஃபி எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆல்யா மானசா தனது பெண் குழந்தை அய்லா சையத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா (Alya Manasa) மற்றும் சஞ்சீவ் கார்த்திக்(Sanjeev Karthick).

இந்த சீரியலில் சின்னையா என்ற ரோலில் சஞ்சீவும், செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யாவும் நடித்து சின்னத்திரை ரசிகர்களை தங்களது கதாபாத்திரங்கள் மூலம் கவர்ந்துள்ளனர்.

வெள்ளித்திரையை விட மக்களோடு மக்களாக ஒன்றிய சின்னத்திரைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு. அதுவும் குடும்ப பெண்களுக்கு சொல்லவே வேணாம்.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் ஜொலித்தவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். சீரியல்களில் ஒன்றாக நடித்து இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு அழகான குட்டி தேவதை பிறந்துள்ளதாக சஞ்சீவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.

குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே அதற்குரிய பொருட்களையும் வாங்கி வைத்திருந்தார். குழந்தை பிறந்து 9 நாட்கள் ஆன நிலையில், குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதன் பிறகு பெண் குழந்தைக்கு அய்லா சையத் என்று பெயரும் சூட்டினார்.

இதையடுத்து, தொடர்ந்து மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது மகளின் அழகான வீடியோ ஒன்றை ஆல்யா மானசா பதிவிட்டுள்ளார். அதோடு, சைலண்ட் செல்ஃபி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று சஞ்சீவ் கார்த்திக்கும், என்னுடைய  குட்டி பப்பு வேகமாக வளர்ந்து வருகிறாள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: கொரோனா பாதிக்கப்பட்ட நடிகை டுவீட்!
Next articleஹீரோயினாகும் விஸ்வாசம் அஜித்தின் ரீல் மகள் அனிகா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here