நீ என்ன வாணி போஜனின் மாமாவா? தொழிலதிபரை தூங்கவிடாமல் கொன்ற ஒற்றை வார்த்தை. செல்போன் எண் மூலம் வந்த அவமானம்.
ஒன்றும் அறியா சினிமா ரசிகர்களுக்காகவே இந்த பதிவு. முதலில் சினிமா எது? நிஜ வாழ்க்கை எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ராஜா ராணி
ராஜா ராணி படத்தில் நயன்தாரா ஏர்வாய்ஸ் நிறுவனத்திற்கு பேன் செய்யும் காட்சியில் தன்னுடைய செல்போன் எண் என்று ஒரு எண்ணை கூறி இருப்பார்.
உண்மையில் அந்த எண்ணுக்கு சொந்தகாரர் ஒரு பள்ளி ஆசிரியர். இதை படக்குழு சரியாக கவனிக்காமல் படமும் வெளியானது.
படம் வெளியான உடன் அந்த எண்ணை அறியா விடலை பருவ ரசிகர்கள் உண்மையில் அது நயன்தாரா எண் தான் போலும் என நினைத்து கால் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இதனால் அந்த ஆசிரியர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுபற்றி அட்லியோ, நயன்தாராவோ கண்டுகொள்ளவில்லை.
ஓ மை கடவுளே
2020-ஆம் ஆண்டு வெளிவந்த அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய படம் ஓ மை கடவுளே.
இந்த படத்தில் வாணி போஜன் என்னுடைய செல்போன் எண் என்று ஒரு நம்பரை இரண்டு முறை கூறுவது போன்ற காட்சிகள் உண்டு.
அந்த செல்போன் எண் உரிமையாளர் கோவையை பூர்விகமாக கொண்ட பூபாலன் என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார்.
படம் வெளியான நாள் முதல் அவருக்கு வாணி போஜனிடம் பேச வேண்டும் என போன் கால் வந்துள்ளது.
ஆரம்பத்தில் விளையாட்டாக நினைக்க நாள் செல்ல செல்ல எதிரில் போன் பேசுபவர்கள் கடினமான வார்த்தைகளை உபயோகிக்க துவங்கிவிட்டனர்.
நீ என்ன வாணி போஜனின் மாமாவா, ஓபனாவே கேட்கிறேன் எவ்ளோ ரேட். எவ்ளோ நாலும் கொடுக்க ரெடி. இப்படி ஆபாச அர்ச்சனைகளுடன் போன் கால்கள் வரத்துவங்கியது.
இதனால் பலநாள் துக்கத்தை தொலைத்த பூபாலன் 19 வருடங்களாக பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை அணைத்து வைத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஓ மை கடவுளே படத்தில் தனது செல்போன் எண் வரும் கட்சியை நீக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
ஒன்று அறியா மடந்தை ரசிகர்கள்
சினிமா எது? நிஜம் எது? என இன்றைய நவீன காலத்திலும் கண்மூடித்தனமான போக்கு கொண்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
அவர்கள் உண்மையில் அறிவதில்லை சினிமாவில் வரும் காட்சிகளுக்கும் நடிகர்களின் நிஜ வாழ்க்கைக்கு துளி கூட தொடர்பு இல்லை என்று.
அப்படி தெரிந்தவர்கள் கூட நப்பாசையில் இந்த நடிகையுடன் பேசிவிட மாட்டோமா என ஏங்கித்தவிப்பார்கள்.
உண்மையில் எந்த நடிகையும் பப்ளிக்காக தன்னுடைய நம்பரை கூற மாட்டார். அப்படி பப்ளிக்காக நம்பர் வெளியாகி விட்டால் அடுத்த நொடியே மாற்றிவிடுவார்கள்.
சினிமா வட்டாரங்களில் கூட நடிகையின் நம்பரை நேரடியாக பெற முடியாது. மேனேஜர் நம்பர் தான் முதலில் கிடைக்கும்.
விஷயம் இப்படி இருக்க, ஒன்று அறியா ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் ஒரு அப்பாவி தொழிலதிபரை ஒற்றைச் சொல்லால் அவரின் தூக்கத்தை கொன்றுவிட்டனர்.