Atharvaa Throwback Picture; அதர்வாவின் த்ரோபேக் பிக்சர்: வைரலாகும் புகைப்படம்! அதர்வா, தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அனைத்து புன்னகைகள் என்று பதிவிட்டுள்ளார்.
அதர்வாவின் த்ரோபேக் பிக்சர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் அதர்வாவும் ஒருவர். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பாலாவின் பரதேசி படம் அதர்வாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.
ஹீரோவை வளர்த்துவிடுவதில் பாலா முக்கிய பங்கு வகிக்கிறார். ஆம், விக்ரமுக்கு சேது படத்தை கொடுத்ததும் அவரே.
ஆனால், இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதர்வா, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, கணிதன், 100, இமைக்கா நொடிகள், இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி, பூமராங் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது குருதி ஆட்டம், தள்ளி போகாதே, ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பத்திரிக்கையாளர் ரிங்கு குப்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு பிடித்த புகைப்படம் என்று அதர்வாவின் த்ரோபேக் பிக்சரை பகிர்ந்துள்ளார்.
இதனை ரீடுவிட் செய்த அதர்வா, எனக்கு பிடித்த புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு டுவிட்டில் தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அனைத்தும் புன்னகைகள் என்று பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்க்கும் விஜய் மாஸ்டர் படத்தில் என்ன கெட்டப்பில் இருக்கிறாரோ அதே கெட்டப் கொண்ட ஹேர்ஸ்டைலுடனும், தாடியுடனும் இருக்கிறார்.
இதை வைத்து பார்க்கும் போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இரு குழந்தைகள் ஒரே புகைப்படத்தில் இருக்கிறார்கள் என்று பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.