Home சினிமா கோலிவுட் இருப்பா நான் கைய கழுவிட்டு வந்துடுறேன்: பாக்யராஜ் புதுவித கொரோனா வீடியோ!

இருப்பா நான் கைய கழுவிட்டு வந்துடுறேன்: பாக்யராஜ் புதுவித கொரோனா வீடியோ!

264
0
Bhagyaraj Corona Video

Bhagyaraj Corona Video; இருப்பா நான் கைய கழுவிட்டு வந்துடுறேன்: பாக்யராஜ் கொரோனா வீடியோ! கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோவும் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் பாக்யராஜ் கொரோனா விழிப்புணர்வு குறித்து புதுவிதமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் 273 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

எனினும், கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும், 2 வாரங்குகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கொரோனா குறித்து புதுவிதமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் முதலில் யோகி பாபுவிற்கு போன் பண்ணுகிறார். அப்போது, அவர் கை கழுவிக் கொண்டிருப்பதாக அவரது உதவியாளர் கூறுகிறார்.

தொடர்ந்து மனோபாலாவிற்கு போன் பண்ணுகிறார். அவரும் கை கழுக் கொண்டிருப்பதாக அவரது உதவியாளர் கூறுகிறார்.

இதையடுத்து, மீனாவிற்கு போன் பண்ணுகிறார். அப்போது, அவரது வீட்டு வேலைக்காரி போன் எடுக்கிறார். அதற்கு மீனாவின் பொண்ணு நைனிகாவிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்கிறார்.

சார், பாப்பா இப்போதான் கை கழுவிக் கொண்டிருக்கிறார்கள். வந்தவுடன் உங்களுக்கு கூப்பிட சொல்கிறேன் என்கிறார் வேலைக்காரி…

இதற்கு ஓகே தாங்கஸ் என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே போன் வைக்கிறார்.

கடைசியாக பாக்யராஜூக்கு போன் வருகிறது. ஆமாம், நான் பாக்யராஜ் தான் பேசுகிறேன். நான் கை கழுவிட்டு அப்புறமாக பேசுகிறேன் என்று கூறி செல்போனை வைக்கிறார்.

இறுதியாக, கொரோனா ரொம்ப கொடிய நோய். அந்த நோயை நாம் கை கழுவவேண்டும் என்றால், நம்ம அடிக்கடி கையை சுத்தமாக கழுவ வேண்டும். அது ரொம்ப முக்கியம். மறந்துவிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஅட்லீ – அர்ஜூன் தாஸ் கூட்டணியில் முதல் பட டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Next article13/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here