Home சினிமா கோலிவுட் நடிப்பின் நாயகன் சியான் விக்ரம் படங்கள்!

நடிப்பின் நாயகன் சியான் விக்ரம் படங்கள்!

432
0
Vikram Movies

நடிப்பின் நாயகன் சியான் விக்ரம் படங்கள்! என் காதல் கண்மணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சியான் விக்ரம் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

உலக நாயகனுக்கு அடுத்த வரிசையில் இருக்கும் நடிப்பின் நாயனான சியான் விக்ரம் படங்கள்…

வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி விக்ரம் தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் முன் கூட்டியே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாதம் விக்ரன் பிறந்தநாள் வருவதால், அவரது நடிப்பில் வந்த படங்களை ரசிகர்கள் ஹலோவில் பகிர்ந்து அவருக்கு இப்போதிலிருந்தே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கதை பிடித்திருந்தால் எவ்வளவு கஷ்டங்களையும் சந்திக்க தயாராக இருக்கும் நடிகர் சியான் விக்ரம்…

திரையுலகில் பலருக்கும் இவர் தான் முன்னுதாரணம்….தன்னை வருத்தி இவர் நடிக்க மேற்கொண்ட ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அற்புதம்…

சியான் விக்ரம் உடல் ரீதியாக தன்னை வருத்தி நடித்த படங்கள் எத்தனையோ…அதில் ஐ படமும் ஒன்று…

கடந்த 1990 ஆம் ஆண்டு திரைக்கு வந்த என் காதல் கண்மணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து வந்த புதிய மன்னர்கள் நல்ல ஒரு பெயரை பெற்றுக் கொடுத்தது.

1999 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது படம் சொல்லவே வேணாம். விக்ரமிற்கு சியான் என்ற அடையாளத்தை கொடுத்த படம்.

விக்ரம் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்த படமாக கருதப்படுகிறது. படத்தில் உள்ள கானா கருங்குயிலே பாடலும் இன்றும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கிறது.

அப்புறம், தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், சாமி, அருள், அந்நியன், கந்தசாமி, ராவணன், தாண்டவம் ஆகிய படங்கள் விக்ரமின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பிரமிக்க வைத்தது.

காசி படத்தில் கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். தற்போது தான் பிரபலங்கள் பலரும் கண்பார்வையற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.

சாமுராய்.. தனது காதலிக்காக அட்டூழியங்களை அழிக்க போராடும் ஒரு வீரன் என்ற கதாபாத்திரம்.

அந்நியன்..அம்பியாகவும், ரெமோவாகவும் ஒரே நேரத்தில் மாறி மாறி இருவேறு ரோலில் வந்து சென்றார். இந்தப் படம் விக்ரமுக்கு சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றுக் கொடுத்தது.

காதலியிடம் காதலை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக அவரது பெற்றோரிடம் ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதினால் எப்படியிருக்குமோ அதே போன்று காதல் கடிதம் எழுதி அவரது பெற்றோரிடம் கொடுப்பார்.

அப்புறம் அந்நியன் ரெமோவாக மாறி காதல் புரோபோஷல் செய்யும் விக்ரம் கதாபாத்திரம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

இதைவிட ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த தெய்வ திருமகள் படம் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் அமைந்தது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் கிரிட்டிக்ஸ் விருது பெற்றுக் கொடுத்தது இந்தப் படம்.

இதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையாகவே நடித்திருந்தார். இவருக்கு திருமணம் நடந்து ஒரு மகளும் இருக்கிறார். அவரை எப்படி படிக்க வச்சு, பாதுகாப்பாக வளர்க்கிறார் என்ற கதையை மையப்படுத்தி இப்படம் திரைக்கு வந்தது.

ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்படி ஒரு பெண் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க முடியும்? என்ற கருத்தை இப்படம் வெளிக்காட்டியுள்ளது.

ஐ படம் விக்ரமுக்கு பிலிம்பேர் விருது பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்திற்காக தனது உடலையும் வருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஒரு நடிகரோடு இல்லாமல், உதவி இயக்குநர், உதவி தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில், அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், ஹலோவில் ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த படங்கள், பாடல்கள் ஆகியவற்றை பகிர்ந்து தங்களது அன்பவை வெளிக்காட்டி வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleGantumoote is Beautiful Romantic Drama of a School Girl
Next articleFEFSI: ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here