Home சினிமா கோலிவுட் தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ்? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ்? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

227
0
Jagame Thandhiram OTT Release

Jagame Thandhiram OTT Release; தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ்? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்! தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக வந்த தகவல் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, மாப்பிள்ளை, 3, மாரி, மாரி 2, அசுரன் என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.

அசுரன் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டம் வெளிவந்து ஓரளவு விமர்சனம் பெற்றது.

ஜகமே தந்திரம் (Jagame Thandhiram)

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பட்டாஸ். தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் Jagame Thandhiram என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜகமே தந்திரம் படத்தில், தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும், தயாரிப்பாலருக்கு லாபம் கிடைக்கும் என்றால் இணையத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று தனுஷ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். ஜகமே தந்திரம் நேரடியாக திரையரங்கில் தான் வெளியிடப்படும் என்று கூறி முற்றுப்புள்ளை வைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து காக்டெய்ல், டேனி, ஆர்கே நகர், லட்சுமி பாம் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதலைக்கு மேல பட்டாம் பூச்சி பறக்குது: துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Next articleமுதலிரவு காட்சியில் சாந்தனு – அதுல்யா ரவி: முருங்கைக்காய் சிப்ஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here