Home சினிமா கோலிவுட் வாலி, குஷி படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பர்த்டே டுடே!

வாலி, குஷி படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பர்த்டே டுடே!

286
0
SJ Surya Birthday Today

S.J.Surya Birthday; வாலி, குஷி படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பர்த்டே டுடே! அஜித்தின் வாலி படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த 1966 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி பிறந்தவர் எஸ்.ஜே.சூர்யா.

லயோலா கல்லூரியில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யாவிற்கு மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு வந்தது.

ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு சென்னையிலேயே தங்கி ஹோட்டலில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பாக்யராஜிடம் அப்ரண்டிஸாக பணியில் சேர்ந்தார்.

இதையடுத்து, இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வந்த ஆசை படத்தில் அசிஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

அதே போன்று இயக்குநர் சபாபதி இயக்கத்தில் வந்த சுந்தர புருஷன் படத்திலும் அசிஸ்டண்ட் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வந்த கிழக்கு சீமையிலேயே படத்தில் நடித்துள்ளார்.

இதே போன்று 1998 ஆம் ஆண்டு பாண்டியராஜ், அமலா, வைஷ்ணவி நடிப்பில் வந்த நெத்தியடி படத்திலும் நடித்துள்ளார். அதுவும், சிறப்பு தோற்றம்.

ஆசை படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்த உல்லாசம் படத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது, அஜித், எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை கேட்க ஒப்புக்கொண்டார்.

அந்த கதை அஜித்துக்குப் பிடித்துப்போக கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் தான் வாலி. இந்தப் படத்தை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.

தல அஜித்தின் வாலி படத்தின் மூலம் தன்னை ஒரு இயக்குநராக காட்டியவர் தான் எஸ்.ஜே.சூர்யா.

தனது முதல் படத்திலேயே அஜித்தை இரு வேடங்களில் நடிக்க வைத்து தன்னை ஒரு இயக்குநராக காட்டியுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கடந்த 2000 ஆம் ஆண்டு தளபதி விஜய்யின் குஷி படத்தை கொடுத்துள்ளார்.

ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து, நானி, நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநரைத் தொடர்ந்து நடிகராகவும் திகழ்ந்துள்ளார். நெத்தியடி, கிழக்கு சீமையிலேயே, ஆசை, மகா நடிகன், கள்வணின் காதலி, திஷ்யூம், திருமகன், வியாபாரி, நியூ, வை ராஜா வை,

ஸ்பைடர், மெர்சன், மான்ஸ்டர், யட்சன், நண்பன், நியூட்டனின் மூன்றாம் விதி, நெஞ்சம் மறப்பதில்லை, உயர்ந்த மனிதன், இறவக்காலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நியூ படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். மாஸ்டர், கள்வனின் காதலி, வியாபாரி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ஸ்பைடர் படத்தின் மூலம் வில்லனாகவும் அவதாரம் எடுத்தார். மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

இயக்குநர், நடிகரை தொடர்ந்து பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளராகவும் திகழ்கிறார்.

இப்படி பல திறமைகளைக் கொண்ட எஸ்.ஜே.சூர்யா இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleமுதல் முறையாக பிரபாஸ் உடன் இணைந்த தீபிகா படுகோனே!
Next articleமாநாடு அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here