Home சினிமா கோலிவுட் ஜிவி பிரகாஷின் 4 ஜி பட இயக்குநர் சாலை விபத்தில் பலி!

ஜிவி பிரகாஷின் 4 ஜி பட இயக்குநர் சாலை விபத்தில் பலி!

0
267
Arun Prasath Accident

AV Arun Prasath Accident; ஜிவி பிரகாஷின் 4 ஜி பட இயக்குநர் சாலை விபத்தில் பலி! ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 4 ஜி பட இயக்குநர் சாலை விபத்தில் பலியான சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாக்கப்படும் 4 ஜி படத்தின் இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அருண் பிரசாத். இவர், கோவை அருகிலுள்ள அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர்.

ஏவி அருண் பிரசாத் என்ற தனது பெயரை வெங்கட் பாக்கர் என்று மாற்றிக்கொண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 4ஜி படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில், காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதீஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார். போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில், கொரோனா லாகடவுன் காரணமாக அனைத்து பணிகளும் முடக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் காரணமாக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த அருண் அங்கேயே தங்கியிருந்தார்.

இன்று காலை தனது டூவீலரில் மேட்டுப்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில், அருண் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருணின் இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருண் பிரசாத்திற்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. அவர் ஆசைப்பட்டு எடுத்த முதல் படம் இது. இன்னும் திரைக்கு வரவேயில்லை.

அதற்குள்ளாக அவர் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார். அருணின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஜிவி பிரகாஷ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்…

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்..நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here