Ram Gopal Varma; ராம் கோபால் வர்மாவுக்கு கொரோனாவா? பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
என்னது ராம் கோபால் வர்மாவுக்கு கொரோனாவா?
தனக்கு கொரோனா என்று அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
உலக நாடுகளே கொரோனா பீதியில் இருக்கிறது. இவ்வளவு, ஏன் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாகத்தான் நாடே ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் கொரோனா பீதியில் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
யாருக்குமே கொரோனா பாதிப்பு வரக்கூடாது என்று தான் ஒவ்வொருவரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அப்படியிருக்கும் போது இந்த இயக்குநருக்கு கொஞ்சம் நக்கல் போல.
தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது உறுதி செய்யப்பட்டது என்று பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.
அவரது டுவீட்டைப் பார்த்த பலரும், நீங்கள் இந்த கொரோனாவை விட பயங்கரமானவர் என்பதால், இந்த கொரோனா உங்களை ஒன்றும் செய்யாது என்றெல்லாம் கூறி கிண்டலடித்தனர்.
மேலும், சிலர் எங்களையெல்லாம் முட்டாளா ஆக்காதீங்க என்று குறிப்பிட்டனர். அவர்கள் குறிப்பிட்டது போலவே, ராம் கோபால் வர்மா, தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா இல்லை.
எனது டாக்டர் என்னிடம் பொய் சொல்லிவிட்டார். என்னை April Fool ஆக்கிவிட்டார். இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த பலரும் அவரை விமர்சனம் செய்துள்ளனர். நாடே படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் போது உங்களுக்கு விளையாடுவதற்கு வேறு ஒன்றும் இல்லையா? என்றெல்லாம் அவரை விமர்சித்துள்ளனர்.
இன்னும் சிலர், இந்த ஆளை புடுச்சு ஜெயிலில் போடுங்க சார் என்று போலீசாரிடம் ஆன்லைனில் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.