Home சினிமா கோலிவுட் அம்மில அரச்சு ரசம் வைக்கும் இயக்குநர் சீனு ராமசாமி: வைரலாகும் வீடியோ!

அம்மில அரச்சு ரசம் வைக்கும் இயக்குநர் சீனு ராமசாமி: வைரலாகும் வீடியோ!

214
0
Seenu Ramasamy Rasam Making Video

Seenu Ramasamy Rasam Making Video; அம்மில அரச்சு ரசம் வைக்கும் இயக்குநர் சீனு ராமசாமி: வைரலாகும் வீடியோ! இயக்குநர் சீனு ராமசாமி அம்மியில் அரைத்து ரசம் வைக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அம்மியில் அரைத்து ரசம் வைக்கும் இயக்குநர் சீனு ராமசாமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் காலங்களில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களை பிஸியாகவே வைத்திருக்கின்றனர்.

சமையல், பாத்திரம் கழுவது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலை பார்ப்பது, உடற்பயிற்சி, யோகா, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாகவே இருக்கின்றனர்.

யாருமே வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியில் வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், அவர் அம்மியில் ரசம் வைப்பதற்கு தேவையான பொருட்களான மிளகு, பூண்டு, சீரகம், வத்தல் ஆகியவற்றை வைத்து அரைக்கிறார்.

அதன் பிறகு அரைத்தததை எடுத்து பாத்திரத்தில் போட்டு ரசம் தயார் செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இரண்டிலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஅடுத்தடுத்து சாதனை படைக்கும் சூரரைப் போற்று: வெய்யோன் சில்லி 10 மில்லியன் வியூஸ்!
Next articleஅப்பாவான ஜிவி பிரகாஷ்: தாயும் சேயும் நலம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here