Home சினிமா கோலிவுட் லா லா இயக்குனர் விக்ரமனை மறக்க முடியுமா

லா லா இயக்குனர் விக்ரமனை மறக்க முடியுமா

1174
0

90களில் மறக்க முடியாத வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் தான் நம் விக்ரமன்.

இளைஞர்கள் பாசமாக பேசினால் பின்னணியில் லாலா என்ற விக்ரமனின் பிரதான இசை கேட்கும் அளவிற்கு இவரது படங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

பாரதிராஜா, மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், பி வாசு போன்ற டைரக்டர்கள் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த நேரம் அது.

புதுவசநதம்

பார்த்திபன் இயக்கத்தில் புதிய பாதை எனும் படத்தில் துணை இயக்குனராக இருந்த விக்ரமன், 1990 ஆம் ஆண்டு புது வசந்தம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

நான்கு இளைஞர்கள் ஒரு வீட்டில் வேலை எதுவும் இல்லாமல் பாடுவதில் இசையிலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆதரவற்ற ஒரு பெண்ணிற்கு ஆதரவு தந்து,அந்த பெண்ணை வில்லனிடமிருந்து காப்பாற்றி, அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு எடுப்பார்கள்.

அப்பொழுது பல அவமானங்களை சந்திப்பார்கள். இறுதியில் படத்தின் கிளைமாக்ஸ் அந்தப் பெண்ணும் 4 ஆண்களும் நண்பர்களாகவே வாழ தொடங்குவார்கள்.

தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய கதையாகவும் கிளைமாக்ஸாகவும் இருந்தது.

மக்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை ஈட்டியது. அந்த ஆண்டில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில விருதைப் பெற்றது.

பெரும் புள்ளி

இவருக்கு முதல் படத்தை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி. இவரது இரண்டாம் படமான பெரும் புள்ளி படத்தையும் தயாரித்தார். படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நான் பேச நினைப்பதெல்லாம்

விக்ரமனின் மூன்றாவது படம் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’. ஆனந்த்பாபு மற்றும் மோகினி நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

புதிய திரைக்கதை களத்துடன் களமிறங்கிய இந்தப்படம், அன்றைய இளைஞர்களின் மத்தியில் பெரிதாக கொண்டாடப்பட்டது .

தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்த மாமா பெண் தன்னை ஏமாற்றி விரக்தி அடைந்த நடிகர், மீண்டும் ஆதரவற்ற ஒரு பெண்ணை கலெக்டர் ஆகி பார்ப்பது படத்தில் பேஸ்.

அருமையான திரைக்கதையுடன் அருமையான பாடலுடன் விவேக்கின் காமெடியுடன் கூடிய படம்தான் இந்த நான் பேச நினைப்பதெல்லாம்.

விக்ரமனின் ஒரு அழகான படைப்பு என்று கூட சொல்லலாம். கொஞ்சம் சலுப்பு இல்லாத திரைகதையாக அமைந்த படம்.

இந்த படத்தில்தான் விக்ரமின் படங்களில் வரும் லாலா என்ற பின்னணி இசை ஆரம்பமானது. படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது.

ஏலேலங்கிளியே மற்றும் பூங்குயில் ராகமே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கோகுலம்

விக்ரமனின் முதல் இரண்டு படங்களை தயாரித்த ஆர்பி சௌத்ரி. மீண்டும் விக்ரமனிடம் இணைந்து கோகுலம் என்ற படத்தையும் தயாரித்தார்.

படமும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தில் ஜெயராமன் பானுப்ரியா அர்ஜுன் நடித்திருந்தார்கள்.

ஏ.ஆர் ரகுமானுடன் புதிய மன்னர்கள்

ஏ ஆர் ரகுமான் உடன் கூட்டணி சேர்ந்த விக்ரமன் ‘புதிய மன்னர்கள்’ எனும் படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் விக்ரம், மோகினி, பாபு கணேஷ், நளினிகாந்த் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரிதாக பேசப்பட்டது. படம் நல்ல கதையுடன் அமைந்தாலும் பெரிதாக வெற்றிபெறவில்லை.

பூவே உனக்காக

இளைய தளபதி விஜய் நாளைய தீர்ப்பின் படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் டநடித்த முதல் எட்டு படங்களும் ஓரளவு பேசப்பட்டதே தவிர வேறு பெரிதாக வெற்றிபெறவில்லை.

ஒரு இசை நிகழ்ச்சியில் விஜய்யை விக்ரமன் பார்க்க சந்திரசேகர் அவர்களிடம் உங்கள் பையனை வைத்து ஒரு படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறார்.

அப்போது அமைந்த அந்தக் கூட்டணி தான் இந்த பூவேஉனக்காக என்ற திரைப்படம்.

ஆல் டைம் ஃபேவரைட் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டது. பெண் ரசிகைகள் விஜய்க்கு அதிகமானவர்கள்.

படம் பட்டிதொட்டி எல்லாம் வெற்றி பெற்றது. விஜய்யை தமிழ்நாட்டில் ஒரு நல்ல நடிகர் என்று காட்டியது இந்த பூவே உனக்காக.

எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றி.

இன்று வரை இந்த பாடலை கேட்டால் நம் உதடுகள் இந்தப் பாடல் முணுமுணுக்கும் அளவிற்கு இந்த படத்தின் பாடல்கள் ஹிட்.

1996 ஆம் ஆண்டு வெளியான போது இந்த படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.

இந்தப்படத்திலும் விக்ரமனின் பிரதான லாலா என்ற பின்னணி இசை இடம் பெற்றிருக்கும்.

சூரியவம்சம்

சரத்குமாருக்கு படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. பணமும் நட்டத்தில் சென்றது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த காலகட்டம்.

விக்ரமிடம் ஐந்தாவது படம் ஆர்பி சவுத்ரி இணைய திட்டமிட்டார். ஜனகராஜ் மற்றும் விஜய்க்காக எழுதப்பட்ட கதைதான் இந்த சூரிய வம்சம்.

பின்பு சரத்குமாரை வைத்து இயக்க முடிவெடுத்தார்கள். இந்த படத்தை பற்றி நான் சொல்லவா வேண்டும்.

இன்றும் சன் டிவி மற்றும் கே டிவியில் ஒளிபரப்பினால் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆல்டைம் ஃபேவரைட் சென்று சொல்லிவிடலாம்.

இன்றளவும் நட்சத்திர ஜன்னலில் பாடல் ஒரு இன்ஸ்பிரேஷன் பாடல் என்று கூட சொல்லலாம்.

இந்த ஒரு பாடல் போல நம் வாழ்க்கையில் வராதா என்று இளைஞர்கள் எண்ணியதும் உண்டு.

சரத்குமாருக்கு சினிமா வாழ்க்கையில் இந்தப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் வேற லெவல் வெற்றி.

அப்போதுதான் ராதிகாவும் சரத்குமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

படத்தில் வரும் ரோஜா பூ சின்ன ரோஜா பூ பாடல் இசை எஸ் ஏ ராஜ்குமார் அவர்களை அனைவராலும் பாராட்டப்பட்டது.

அடுத்தடுத்த வருடங்களில் இந்த படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், போஜ்புரி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்துக்காக விக்ரமன் சிறந்த இயக்குனருக்கான தமிழ் மாநில விருதை பெற்றார்.

இந்த படத்திலும் இவரது லாலா என்ற பிரதான பின்னணி இசை இடம் பெற்றிருக்கும்.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

விக்ரமனின் அடுத்த படம் தான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் கார்த்தி ரோஜா அஜித் நடித்த படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வழக்கம் போல ஒரு கஷ்டப்படும் பெண்ணை ஆட்டோ டிரைவராக இருக்கும் கார்த்தி ரோஜாவை சிறந்த பாடகியாக ஆக்குவதே கனவாக வைத்திருப்பார்.

அதனால் அவர் சந்திக்கும் அவமானங்கள் சந்தோசங்கள் கஷ்டங்களை இந்த படத்தில் கதை.

இந்த படத்தில் சில காட்சிகள் மட்டுமே அஜித் நடித்திருந்தாலும் சிறப்பாக நடித்திருப்பார்.

விக்ரமன் படம் என்றாலே நல்ல கிளைமாக்சை நாம் எதிர்பார்க்கலாம்.

இந்த படத்திலும் அது நிறைவேறியிருக்கும். இந்த படம் 5 தமிழ்நாடு மாநில விருதுகளை பெற்றது.

சிறந்த டைரக்டர், சிறந்த கதாசிரியரான விருதை டைரக்டர் விக்ரமன் பெற்றார்.

வானத்தைப் போல

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விக்ரமின் அடுத்த படம் தான் வானத்தைப்போல.

விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பல தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

தம்பிகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒரு அண்ணனின் கதை. இணைபிரியாத தம்பிகளின் கதையை அழகாக வடிவமைத்து இருப்பார் இயக்குனர் விக்ரமன்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று அனைவராலும் ரசிக்கப்பட்டது.

விஜயகாந்துக்கு இந்தப்படம் மிகப்பெரிய திருப்புமுனை என்று கூட சொல்லலாம் அந்த காலகட்டத்தில்.

சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. இரண்டு தமிழ்நாடு மாநில விருதையும் பெற்றது.

இந்த படம் பல தியேட்டர்களில் உரிமையாளர்களை வாழ வைத்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பங்களை தியேட்டருக்கு அழைத்து வந்தது இந்த படம்.
விக்ரமனை உச்சிக்கு அழைத்துச் சென்றது இந்த படம்.

உன்னை நினைத்து

சூர்யா நீண்ட நாட்களாக வெற்றிக்கே போராடிக் கொண்டிருந்தார் பெரிதாக வெற்றி எதுவும் அமையவில்லை.

அப்போது விக்ரமிடம் கூட்டணி அமைத்து உன்னை நினைத்து என்ற படத்தை வெளியிட்டார்கள்.

இதுவும் விக்ரமனின் அக்மார்க் கதையான கஷ்டப்படும் ஒரு பெண்ணை நாயகன் படிக்க வைப்பது, படித்து முடித்தவுடன் அந்த பெண் நாயகனின் ஏமாற்றி செல்வது படம்.

மிகப்பெரிய வெற்றி பெற்றது. விக்ரமன் எல்லா படத்தின் பாடலை போலவும் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தமிழ்நாடு மாநில விருதையும் பெற்றது. சூர்யாவிற்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது இந்த படம்.

இந்த படத்திலும் விக்ரம் இன் லா லா என்ற பின்னணி இசை ஒலிக்கும்.

‘பொம்பளைங்க காதலதான் நம்பிவிடாதே’ என்ற பாடல் எல்லோராலும் ரசிக்கப்பட்டது.

பிரியமான தோழி

அடுத்ததாக மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்த படம்தான் பிரியமான தோழி.

இந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. இந்த படம் விக்ரமனின் வழக்கம்போல் கதையாக இல்லாமல் மாறுபட்ட கதையாக இருந்தது.

மீண்டும் விக்ரமன் படத்தில் எஸ் ஏ ராஜ்குமார் இசை பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

‘புள்ளி மான் குட்டியே’ மற்றும் ‘பெண்ணே நீயும் பெண்ணா’ பாடல்கள் அனைவராலும் பேசப்பட்டது.

இந்த படத்தை ஏவிஎம் ப்ரொடக்சன் தயாரித்து வெளியிட்டது.

விக்ரமனின் 90% படங்கள் சன் டிவி தொலைக்காட்சி உரிமையை பெற்றது.

விக்ரமன் மறுபடியும் தெலுங்குக்கு சென்று இரண்டு படங்கள் எடுத்த படங்கள் பெரிதாக வெற்றி பெற வேண்டும் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

சென்னையில் காதல், மரியாதை, நினைத்தது யாரோ போன்ற படங்களை இயக்கினார் படங்கள் பெரிதாக போகவில்லை.

2005 ஆம் ஆண்டு வரை விக்ரமன் படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு சாம்ராஜ்யமாக இருந்தார்.

இவரது படங்கள் அனைத்தும் இளைஞர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரும் அளவிற்கு இருக்கும்.

இவரது படத்தின் பாடல்கள் இன்றும் மக்களிடையே கேட்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.

தற்போது விக்ரம் தமிழ்நாடு இயக்குனர் அசோசியேசனின் தலைவராக உள்ளார்.

Previous articleமறுபடியும் முதல இருந்தா? வேறு வழியில்ல: பழைய சீரியல்களை தட்டி தூக்கும் சேனல்கள்!
Next articleMankatha: கே.டிவியில் மங்காத்தா: கொண்டாடும் தல ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here