Darbar; குடும்பத்தோடு பார்க்க இதோ நல்ல நேரம் வந்திருச்சு: டிவியில் தர்பார்! ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்த தர்பார் படம் இன்று பிற்பகல 12 மணிக்கு ஸ்டார் கோல்டு இந்தியா சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தர்பார் படம் இன்று பிற்பகல் 12 மணிக்கு ஸ்டார் கோல்டு இந்தியா சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்த படம் தர்பார். ரஜினியின் 167 ஆவது படமாக கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக தர்பார் (Darbar) படத்தில் நடித்திருந்தார். இவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
மும்பையில் போதைப் பொருள் கும்பலை என்கவுண்டர் மூலம் சுட்டுத்தள்ளும் ஒரு டான் போலீஸ் தான் ரஜினி.
லைகா புரோடக்ஷன் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
என்னதான் ரஜினியின் வயதான தோற்றம் தர்பார் (Darbar) படத்தில் தெரிந்திருந்தாலும், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
பாடல்களும் சொல்லவே வேணாம். அந்தளவிற்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு இருந்தது. அதுல சும்மா கிழி பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.
பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்ததாக விக்கிப்பீடியாக தகவல் தெரிவிக்கின்றது.
திரைக்கு வந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆன நிலையில், தர்பார் (Darbar) படம் டிவியில் வெளியாக இருக்கிறது.
ஆம், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி 21 நாட்களுக்கு வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் ஸ்டார் கோல்டு இந்தியா என்ற ஹிந்தி சேனல் தர்பார் (Darbar) படத்தை இன்று ஒளிபரப்பு செய்கிறது.
இன்று பிற்பகல் 12 மணிக்கு தர்பார் படம் ஸ்டார் கோல்டு இந்தியா (Star Gold India, Today at 12 PM) என்ற ஹிந்தி சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. குடும்பத்தோடு அமர்ந்து தர்பார் (Darbar) படத்தை ரசிக்க இதுதான் சரியான நேரம்.
ஹிந்தியில் இன்று ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், தெலுங்கில் வரும் 10 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெமினி டிவியில் (Gemini TV, 10th April at 6.30 PM) ஒளிபரப்பாகிறது.
அப்போ தமிழ் சேனலில் வருமா என்று கேட்டால் வெளியாகும் என்றுதான் பதில். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு தர்பார் படம் சன் டிவியில் (SunTV, 14th April at 6.30 PM) ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக டுவிட்டரில் தர்பார் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.