Hansika Motwani; இது ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிட்டு யூடியூப் சேனல் தொடங்கிய ஹன்சிகா! தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள மஹா படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவில் சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது, ஓவியம் வரைதல், ரசிகர்களுடன் உரையாடல் என்று பிஸியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானி முதல் முறையாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இது குறித்து ஹன்சிகா கூறுகையில், உற்சாகமாகவும், படபடப்பாகவும் இருக்கிறது.
என்னுடன் இணைந்து என்னுடைய வாழ்க்கைக்கு உள்ளே சென்று எனது உண்மையான பக்கத்தை அறிந்துகொள்ள தயாராக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனலுக்காக நடந்த படப்பிடிப்பை சேனலில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக பிக் பாஸ் புகழ் வனிதாவும் யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். அதில், தனக்கு பிடித்த சமையல் குறிப்புகள் குறித்து பதிவிட்டு வருகிறார்.