Home சினிமா கோலிவுட் வீட்டிற்குள் வன்முறை நடக்குமா? மும்தாஜ்!

வீட்டிற்குள் வன்முறை நடக்குமா? மும்தாஜ்!

286
0
Mumtaz Domestic Violence

Mumtaz Video; வீட்டிற்குள் நடக்கும் வன்முறை: மும்தாஜ் வைரல் வீடியோ! ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் வீட்டிற்குள் நடக்கும் வன்முறை குறித்து நடிகை மும்தாஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வீட்டிற்குள் நடக்கும் வன்முறை குறித்து நடிகை மும்தாஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழ்நிலை.

இந்த சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே வன்முறை நடக்காது என்று சொல்ல முடியாது. வீட்டிற்க்குள்ளேயும் வன்முறை நடக்கும். இது குறித்து நடிகை மும்தாஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்தாஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். இது வீட்டில் நடக்கும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோ.

இது யாரால் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், இதில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள்.

யாரும் அவர்களுக்கு உதவிக்கு வரமாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்த ஊரடங்கு உத்தரவின் போது கூட தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. உங்களுக்கு உதவி செய்வதற்கு என்று பலரும் தயாராக இருக்கிறார்கள்.

உதவி தேவைப்பட்டால், 1800 102 7282 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இந்த நம்பரை உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஇது ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிட்டு யூடியூப் சேனல் தொடங்கிய ஹன்சிகா!
Next articleமாஸ்டர் படத்துக்கு வந்த சிக்கல்களை சுட்டிக்காட்டிய இயக்குநர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here