Home சினிமா கோலிவுட் Happy birthday selvaraghavan: செல்வராகவன் எனும் ஜீனியஸ்

Happy birthday selvaraghavan: செல்வராகவன் எனும் ஜீனியஸ்

292
0
Happy birthday selvaraghavan

Happy birthday selvaraghavan: செல்வராகவன் எனும் திரையுலக ஜீனியஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! புதுப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமா விதிகளை மாற்றியவர்.

செல்வராகவன் எனும் ஜீனியஸ்

மனித உணர்வுகள் எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. குறிப்பாக உறவுகளின் விஷயத்தில் அனைவருக்கும் உணர்வுகள் நிலையாகவோ, அனைவரும் ஒத்தக்கருத்துடையவராகவோ இருப்பதில்லை.

மனித ஆழ்மனம் பலவித வினோதங்களை கொண்டது. அப்படிப்பட்ட வினோதங்களை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களை கொடுப்பவர்களில் செல்வராகவன் மிகமுக்கியமானவர்.

நம் கோலிவுட்டை பொறுத்தவரையில் செல்வராகவன் எடுத்த அனைத்து கதைகளுமே அதற்கு முன் யாரும் காட்டாத பாணியிலே திரையில் இருக்கும்.

துள்ளுவதோ இளமையில் இருந்து இறுதியாக வெளிவந்த என்.ஜி.கே வரை அவருடைய திரைக்கதை பாணி சற்றே மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானதாக இருக்கும்.

காதல் கொண்டேன் வந்த சமயத்தில் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா இன்டஸ்ட்ரியும் அதிர்ந்தது.

இப்படியொரு கதைக்களத்தை எப்படி மக்கள் அங்கிகரிப்பார்கள் என்ற எண்ணமும் பரவலாக அச்சமயத்தில் இருந்தது.  படம் வெளியானபிறகு அவ்வெண்ணங்கள் எல்லாம் சில்லறைகளாக தெறித்தன.

மனித மனங்களில் உள்ள போற்றப்படும் நிகழ்வுகளையும் பண்புகளை கொண்டவர்களையே கதையின் நாயகர்களாக வைத்து படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது, வெகு சிலர் மட்டுமே மனித மனதின் ஆழத்தில் உள்ள குழப்பங்களையும் கேள்விகளையும் கொண்ட மனிதனை கதையின் நாயகர்களாக வைத்து படமெடுப்பர்.

அவர்களுள் செல்வராகவனுக்கு தனியிடமுண்டு. இவரது கதையில் அன்பு, காதல், காமம், குரோதம், துரோகம், வன்முறை என எல்லாவித உணர்வுகளும் இவர் படங்களில் நாம் வெவ்வேறு கோணங்களில் காண முடியும். எமோஷனல் கணக்ட் என்பது இவர் படத்தில் எளிதாக நிகழும்.

செல்வராகவனும் இசையும்:

செல்வராகவன் படங்களில் பாடல்களுக்கேன தன்யிடமுன்டு. கதையோடு ஒன்றி எப்போதைக்குமான பாடலாக அது திகழும்.குறிப்பாக

யுவன்-செல்வராகவன்-நா.முத்துக்குமார் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களுக்குமே ஏகப்பட்ட காதுகள் சொந்தமாகிருக்கிறது.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி படங்களின் ஆல்பங்களெல்லாம் கேட்பவர்களை துடிதுடிக்க வைக்கும்.

யுவன் இல்லாமலும் செல்வராகவனின் படங்கள் வெளிவந்திருக்கிறது. அத்தகைய படங்களிலுமே பாடல்கள் நன்றாகவே இருக்கும்.

இவரின் அனைத்து படங்களுக்குமே பின்னனி இசைக்கு முக்கியப்பங்குண்டு. அவரின் படங்களில் கூட இப்படம் நன்றாக இல்லை என்று குறிப்பிட்டு சொல்ல முடியும்.

ஆனால் அவர் பட பாடல் ஆல்பங்களை நன்றாக இல்லை என்றெல்லாம் தவிர்க்கவே முடியாது. ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்களுக்கான இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ஒரு பட்டாளமே இருக்கிறது.

சமீபத்தில் ஒரு தியேட்டரில் மறுவெளியீடு செய்யப்பட்ட புதுப்பேட்டைக்கும், ஆயிரத்தில் ஒருவனுக்கும் கிடைத்த வரவேற்பை கண்டு ஆச்சரியமடைந்தவர்கள் ஏராளம்.

செல்வராகவனும் காலம் வந்தால் எடுக்கலாம் போன்ற பதிலைத்தான் சொல்கிறார்.

பெரிய நடிகர்களுக்கே தொடர்ந்து படம் பெரிதும் சோபிக்கவில்லையெனில் ரசிகவட்டம் குறைவதை பார்க்க முடிகிறது.

அப்படியிருக்கையில் பெரிய வெற்றி என்று எந்த ஒன்றையும் செல்வராகவன் பெற்று வருடக்கணக்காகிறது.

இருப்பினும் செல்வராகவனை ரசிக்கும் கூட்டம் என்பது துளியும் குறையவில்லை. என்.ஜி.கே திரைப்படம் ஏமாற்றமாக இருந்தது உண்மைதான். ஆனாலும் அவர் கொடுக்க போகிற படங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது.

நிறைய படங்கள் எடுங்கள். உங்கள் கதைக்காக எப்போதும் இரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் பாணியிலேயே நீங்கள் படமெடுங்கள் போன்ற கோரிக்கைகளோடு, என்றும் நலமுடன் வாழுங்கள் என்ற வாழ்த்துகளுடனும் செல்வராகவன் எனும் ஜீனியஸ்-க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Happy birthday selvaraghavan

Previous articleபியூஸ் சாவ்லா சிக்ஸ்; அடித்த அடியில் கண்ணாடி உடைந்தது
Next article6/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here