Home சினிமா கோலிவுட் தல அஜித்தின் தக்‌ஷாவிற்கு பாராட்டு: கர்நாடகா துணை முதல்வர்!

தல அஜித்தின் தக்‌ஷாவிற்கு பாராட்டு: கர்நாடகா துணை முதல்வர்!

219
0
Ajith Dhaksha Team

Ajith Dhaksha Team; தல அஜித்தின் தக்‌ஷாவிற்கு பாராட்டு: கர்நாடகா துணை முதல்வர்! தல அஜித்தின் தக்‌ஷாவிற்கு கர்நாடகா துணை முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அஜித்தின் தக்‌ஷாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண்.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். கார், பைக் ரேஸ் என்று அனைத்திலும் கலக்கும் வல்லமை படைத்தவர். தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், தக்‌ஷா குழு மூலமாக ட்ரோன் உருவாக்கி பல சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது இந்த தக்‌ஷா குழு புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி வரையில் இந்த ஊரங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஜூலை மாதத்திலும் லாக்டவுன் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில், தற்போது தக்‌ஷா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம், மருத்துவமனை உள்ளிட்ட மிக குறுகலான, நெரிசலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கு தல அஜித் தலைமையிலான தக்‌ஷா குழுவினர் முன் வந்துள்ளனர். இதன் காரணமாக #AJITHLedDroneToFightCorona என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் அண்மையில், டிரெண்டானது.

ஏற்கனவே, தக்‌ஷா குழுவினர், கடந்த மார்ச் மாதம், 3 லட்சம் சதுர கிமீ பரப்பளவு சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலமாக கிட்டத்தட்ட 900 லிட்டர் கிருமி நாசினை தெளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மறுபடியும் தக்‌ஷா குழுவினர் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தல அஜித்தின் தக்‌ஷாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அஜித்தின் அறிவுறுத்தலின் படி, ட்ரோன்கள் மூலம் பெரிய அளவிலான பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், பல நிறுவனங்கள் நல்ல பல விஷயங்களுடம் வருகின்றன. தற்போது இன்று முற்றிலும் கொரோனாவை ஒழிப்பதற்கு அஜித்தின் வழிகாட்டுதலின் படி, அண்ணா பல்கலைக்கழகம், தக்‌ஷா, சுகர்தனா ஆகியோர் முன்வந்துள்ளனர்.

அவர்களுக்கு எனது மனதார பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, கொரோனாவை ஒழிப்பதற்கு கிருமி நாசினி தெளிக்கும் ஆளில்லா விமானத்தை உருவாக்கிய தல அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு டாக்டர் கார்த்திக் (LIT Skills Learning) நன்றி தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக ஹலோவில் அஜித்தின் ஐடியா வைரல் என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleMaster Karaoke; மாஸ்டர் கரோக்கி: குட்டி ஸ்டோரி Karaoke Version வெளியீடு!
Next articleஎனக்கு பறக்க வேண்டும்: ஹரிஷ் கல்யாணின் ஆசை: வைரலாகும் கவிதை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here