Home சினிமா கோலிவுட் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எப்போ நீதி கிடைக்கும்? கார்த்தி கேள்வி!

பொள்ளாச்சி சம்பவத்திற்கு எப்போ நீதி கிடைக்கும்? கார்த்தி கேள்வி!

354
0
Karthi Pollachi Case

Nirbhaya Case; பொள்ளாச்சி சம்பவத்திற்கு எப்போ நீதி கிடைக்கும்? கார்த்தி கேள்வி! டெல்லி சம்பவத்திற்கு நீதி கிடைத்துவிட்ட நிலையில், பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கிடைக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில், ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் ராம்சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே போன்று 18 வயதுக்குட்பட்ட ஒருவர் 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

முகேஷ் சிங் (32), வினய் சர்மா (26), அக்‌ஷய் தாக்குர் (31), பவன் குப்தா (25) ஆகிய 4 பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டை நிறைவேற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இறுதியாக 8 ஆண்டுகளைக் கடந்து நிர்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளது. பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க எவ்வளவு காலம் ஆகுமோ என்று யோசிக்கிறேன்.

ஏற்கனவே ஓராண்டு கடந்துவிட்டது. அந்த பொள்ளாச்சி சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடத்தை மறந்துவிடமாட்டோம் என்று நம்புகிறேன். எப்போதும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற நடிகர்கள், எப்போது இது குறித்து கேள்வி எழுப்பி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நிர்பயா தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

Actor Karthi questioned about when will getting justice for pollachi case?

SOURCER SIVAKUMAR
Previous articleகேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லைகள் மூடப்படுகிறது – தமிழ்நாடு அரசு அறிக்கை
Next articleஅச்சச்சோ இதெல்லாம் வதந்தி: அமலா பால் சொல்லல!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here