Home சினிமா கோலிவுட் யார் அந்த கமலி? எங்கிருந்து வருகிறார்? டுவிட்டரில் டிரெண்டிங்!

யார் அந்த கமலி? எங்கிருந்து வருகிறார்? டுவிட்டரில் டிரெண்டிங்!

490
0
Kamali From Nadukkaveri

Kayal Anandhi; கயல் ஆனந்தி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கயல் ஆனந்தி. கயல் படத்தின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றார்.

கயல் படத்தைத் தொடர்ந்து, சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், பண்டிகை, என் ஆளோட செருப்ப காணோம், பரியேறும் பெருமாள் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.

தற்போது இவரது நடிப்பில் டைட்டானிக், எங்கே அந்த வான், அலாவுதீன் அற்புத கேமரா, ஏஞ்சல், ராவண காண்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜசேகர் துரைச்சாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று 4 மணி வரை யார் அந்த கமலி என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது அதற்கு பதில் கிடைக்கும் வகையில் கயல் ஆனந்தி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வந்துள்ளது.

ராஜசேகர் துரைச்சாமி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடிக்கும் புதிய படத்திற்கு கமலி from நடுக்காவேரி (KamaliFromNadukkaveri) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தீனதயாளன் இசையமைக்கிறார். சாய் சம்பத் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் கமலி என்ற கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தி நடித்து வருவதாக கூறப்படுகிறது. கமலி from நடுக்காவேரி என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (KamaliFromNadukkaveri) வெளியாகியுள்ளது. அதில், ஆனந்தி கையில் நோட்டுடனும், தோள்பட்டையில் பேக்கும் வைத்துக்கொண்டு கல்லூரிக்கு நடந்து வருவது போன்று காட்டப்பட்டுள்ளது.

மேலும், உன்மீது நம்பிக்கை கொள் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 14 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வரும் என்றும், ஏப்ரல் 17 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது என்றும் அந்த போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கயல் ஆனந்தியின் கதாபாத்திரம் தான் கமலி என்றும், அவரது ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு தாலுகா பகுதியின் நடுக்காவேரி. இந்த கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு படிக்க வருகிறார்.

கல்லூரியில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்திய படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here