Home சினிமா கோலிவுட் காரைக்குடி, திருவாரூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ புகழ் கோவை சரளா பர்த்டே டுடே!

காரைக்குடி, திருவாரூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ புகழ் கோவை சரளா பர்த்டே டுடே!

0
371
Kovai Sarala Birthday

கோவை சரளா இன்று தனது 58 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோவை சரளாவின் 58ஆவது பிறந்தநாள் இன்று.

கோவை சரளா

கடந்த 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி கோவையில் பிறந்தார். இவரது இயற்பெயர் என்னவோ சரளா தான்.

ஆனால், தான் பிறந்த கொங்கு நாடான கோவை என்ற சொல்லை தனது பெயருக்கு முன் அடைமொழியாக சேர்த்து கோவை சரளா என்று அழைக்கப்படுகிறார்.

எம் ஜி ஆரும், கோவை சரளாவும்

நல்ல பேச்சாளராக திகழ்ந்த கோவை சரளாவுக்கு கோவை வந்த எம்ஜிஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோவை சரளாவின் திறமையறிந்த எம்ஜிஆர், உனக்கு நிறைய திறமை இருக்கு… நீ நல்லாப் படிக்கணும்னு சொல்லி, மேலும் படிப்பதற்காக உதவித் தொகை வழங்கினார்.

அவரது உதவித் தொகையில் படித்து வளர்ந்த கோவை சரளா, அவரைப் போன்று தானும் பிறருக்கு படிப்பற்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டார்.

பள்ளிப்படிப்பை முடித்த கையோடு திரையுலகில் கால்பதித்துள்ளார்.

கோவை சரளா திரைப்பயணம்

கோவையிலிருந்து சென்னை வந்த கோவை சரளா நடிகர் பாக்யராஜை சந்தித்து பேசியுள்ளார்.

அவரது பேச்சில் மயங்கிய பாக்யராஜ் திரைக்கதை எழுதி, நடித்த முந்தானை முடிச்சு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அறிமுக படமே வரவேற்பு கொடுத்ததால், வைதேகி காத்திருந்தாள், தம்பிக்கு எந்த ஊரு, மகளிர்க்காக, சின்னவர், எங்களுக்கும் காலம் வரும், கந்தா கடம்பா கதிர்வேலா, பூவெல்லாம் உன் வாசம், கோவை பிரதர்ஸ், காஞ்சனா, தில்லு முல்லு, உளியின் ஓசை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

30 ஆண்டுகால சினிமா வாழ்க்கை

தமிழில் மட்டும் இதுவரை 154 படங்களில் நடித்துள்ளார். அதோடு, தெலுங்கில் 57 படங்களிலும், மலையாளத்தில் 5 படங்களிலும், கன்னட மொழியில் 3 மொழிகளிலும் நடித்துள்ளார்.

மேலும், தனது 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதுவரை 750க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழக மாநில திரைப்பட விருது

சதி லீலாவதி, பூவெல்லாம் உன் வாசம் மற்றும் உளியின் ஓசை ஆகிய படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகைக்கான தமிழக மாநில திரைப்பட விருது பெற்றார்.

கோவை சரளா பேசிய பேமஸ் டயலாக்ஸ்

கரகாட்டக்காரன் – என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம், என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, திருவாரூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்

ஷாஜகான் – தொறை இங்கிலீஸ் எல்லாம் பேசுது, சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்

தொலைக்காட்சி வாழ்க்கை

முந்தானை முடிச்சு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை கோவை சரளா 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு சினிமா வாய்ப்பு இல்லை.

அப்போதுதான் தொலைக்காட்சி பக்கம் தனது கவனத்தை செலுத்தினார். சன் டிவியில் சுந்தரி சௌந்தரி, கலைஞர் டிவியில் வந்தனா தந்தனா மற்றும் ஜெயா டிவியில் சபாஷ் மீரா போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.

அதுவும் இந்த மூன்றும் முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யார் என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்துள்ளார்.

தற்போது கலைஞர் டிவியில் வரும் பாசப் பறவைகள் என்ற குடும்ப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கோவை சரளா அவர்கள், இதுவரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. இரக்க குணம், பரந்த உள்ளம் படைத்த நடிகை கோவை சரளா தனது உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளை தனது பிள்ளைகளாக பாவித்து அவர்களை கண்டிப்போடு வளர்த்து வருகிறார்.

அதோடு, எம்ஜிஆரது தீவிர ரசிகையான கோவை சரளா அவரைப் போன்று பல ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கும், வயதானவர்கள் நலனுக்காகவும் உதவிகள் செய்து வருகிறார்.

ஆச்சி மனோரமா

பொதுவாக நகைச்சுவை திறன் என்பது எல்லோருக்குமே அமைந்துவிடாது. அதுவும், பெண்கள் நகைச்சுவை உணர்வோடு இருப்பது என்னவோ அதிசயம்தான்.

சினிமாவில் நகைச்சுவை உணர்வோடு இருப்பவர்கள் என்னவோ குறைவுதான். தமிழ் சினிமாவில் இன்று வரை ஆச்சி மனோரமாவின் நகைச்சுவைக்கு ஈடு இணை யாரும் இல்லை.

ஆனால், அவருக்கு அடுத்த வரிசையில் இருப்பவர்கள் பட்டியலில் கோவை சரளா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் நடிகை தேவர்தர்ஷினி இருக்கிறார்.

கோவை சரளா, தேவதர்ஷினி காம்பினேஷன்தான் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என்று சொன்னால் மிகையாகாது.

பின்னணி பாடகி, தயாரிப்பாளர்

சிறையில் பூத்த சின்ன மலர், வில்லு ஆகிய படங்களில் பாடல் பாடியுள்ளார். உழைத்து வாழ வேண்டும் என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கோவை சரளா இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் கோவை சரளாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே கோவை சரளா மேடம்…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here