Home சினிமா கோலிவுட் அச்சச்சோ! மிரண்டுபோன லோகேஷ் – அப்படி என்ன நடந்தது?

அச்சச்சோ! மிரண்டுபோன லோகேஷ் – அப்படி என்ன நடந்தது?

247
0

Lokesh Kanagaraj: அச்சச்சோ! எல்லாமே பேக் அக்கவுண்ட்: யாரும் நம்பாதீங்க: மாஸ்டர் இயக்குநர்! மாஸ்டர் ரிலீஸ் தேதி பத்தி நான் ஒன்னும் சொல்லலை.

மாஸ்டர் படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் படம் ரிலீஸ் தேதி குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) போலி கணக்கில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்துள்ளது.

எனக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அக்கவுண்ட் கிடையாது என்று மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை கொடுத்தார்.

கைதி படம் லோகேஷ் கனகராஜிற்கு தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, வசூலைத் தொடர்ந்து கைதி 2 ஆம் பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கைதி வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கடந்த மாதம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், அன்று கொரோனா வைரஸ் காரணமாக அன்று ஒருநாள் முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, மார்ச் 25ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாஸ்டர் டிரைலர், ரிலீஸ் தேதி வெளியாகாத நிலையில், லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) பெயரில் போலி அக்கவுண்ட் உருவாக்கி அதன் மூலம் சிலர் மாஸ்டர் அப்டேட் கொடுத்து வந்துள்ளனர்.

தற்போது இது குறித்து விளக்கம் கொடுக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது;

நண்பர்களே நான் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் இல்லை. நான் டுவிட்டரில் மட்டுமே ஆக்டிவாக இருக்கிறேன். மற்ற எல்லா கணக்குகளும் போலி. ஜாக்கிரதை என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரை மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு ஏதும் வரவில்லை. இதனால், ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமடைந்துள்ளனர்.

Previous articleSuper Pink Moon “சூப்பர் பிங்க் நிலா” பற்றி தெரிந்து கொள்வோம்
Next articleBoris johnson: இங்கிலாந்து பிரதமர் கவலைக்கிடம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here