Home நிகழ்வுகள் உலகம் Boris johnson: இங்கிலாந்து பிரதமர் கவலைக்கிடம்?

Boris johnson: இங்கிலாந்து பிரதமர் கவலைக்கிடம்?

306
0

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris johnson) கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 204 நாடுகளுக்கு மேல் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.

பல்லாயிரம் மக்களைக் கொன்று பல லட்சம் மக்களைப் பாதித்து இந்த வைரஸை பல நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளார். இதனால் மக்கள் தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னட பிரதமரின் மனைவி, பிரிட்டன் இளவரசர், ஸ்பெயின் இளவரசி, பிரிட்டன் பிரதமர், பிரிட்டனின் சுகாதாரத்துறை அமைச்சர் போன்றவர்களை கூட இந்த தொற்று விட்டு வைக்கவில்லை.

கடந்த மாதம் பிரிட்டன் பிரதமருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டு. தன்னைத்தானே தன் சொந்த வீட்டில் தனிமை படித்துக் கொண்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வைரஸ் தாக்கம் அதிகமானதால் இங்கிலாந்து பிரதமரை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது என்று ரைட்டர்ஸ் செய்திகளில் வெளியாக உள்ளது.

சிறந்த அனுபவம் மிக்க மருத்துவ குழுவால் போரிஸ் ஜான்சனை கண்காணித்து வருகிறார்கள்.

போரிஸ் ஜான்சன் தற்போது வரை சுய நினைவுடன் இருக்கிறார் என்றும் ஒருவேளை மயக்கம் அடைந்தால் அவருக்கு பதிலாக வெளியுறவுதுறை செயலர் டோமினிக் ராப் பிரதமரின் அலுவலக பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று டோமினிக் ராப் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டம் நடந்தது.

போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், போரிஸ் ஜான்சனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது உண்மைதான் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு நிமோனியா காய்ச்சல் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Previous articleஅச்சச்சோ! மிரண்டுபோன லோகேஷ் – அப்படி என்ன நடந்தது?
Next articleஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை நிதியுதவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here