நடிகை மகிமா நம்பியார் தனது வீட்டு சுவற்றில் ஓவியம் வரைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகிமா நம்பியார் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே இருப்பதுதான் கொரோனாவுக்கு எதிரான ஒரே முடிவு என்று அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
கொரொனா வைரஸ் காரணமாக பாதுகாப்புக்காக அலுவலங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக கடிகாரத்தைப் போன்று நிற்காமல் சுழன்று கொண்டிருந்த சினிமா பிர்பலங்கள் தற்போது வீட்டிற்குள்ளேயே அடைபட்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், ஹீரோக்கள் தங்களது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றி, அதில், உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், ஹீரோயின்கள் வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது மற்றும் பெயிண்டிங் என்று இப்போதும் பிஸியாக இருக்கின்றனர்.
ஒரு சில ஹீரோயின்கள் கிச்சன் பக்கம் செல்லாமல், தங்களது உடலை பிட்டாக வைத்திருக்க உடற்பயிற்சி, யோகா ஆசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை மகிமா நம்பியார் தனது வீட்டு சுவற்றில் ஓவியம் வரைந்து தனக்குள் இப்படியொரு திறமை இருக்கிறது என்று பார்வையாளர்களான ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
அதில் ஒரு பெண்ணின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மகிமா நம்பியார் ஓவியம் வரைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியான அசுரகுரு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் அவர் பை ஓட்டுவது, புகை பிடிப்பது, கொள்ளையடிக்கும் கும்பலை கண்டுபிடிப்பது என்று ஒரு போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது கிட்னா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.