டிஜிட்டல் சந்தையில் ஜியோவை விரிவாக்கம் செய்ய 10 சதவீத பங்கினை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விற்பனை செய்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
உலக பில்லியனர்களில் ஒருவரான இந்தியாவின் முகேஷ் அம்பானியின் நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ.
இந்தியாவில் இலவச அழைப்புகள், இலவச மெசேஜ்கள், ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா போன்ற சேவைகளை முதன்முதலில் கொண்டுவந்தது ஜியோ நிறுவனம்.
இந்தியாவின் டேட்டா சேவையை ஜியோக்கு முன், ஜியோக்கு பின் என்றுகூட பிரிக்கலாம் அந்த அளவுக்கு மக்களுக்கு பல சலுகைகளை கொடுத்தது ஜியோ தான்.
தற்போது இந்திய டிஜிட்டல் சந்தைகளில் ஜியோவை இன்னும் விரிவாக்கம் செய்ய அதன் 10 சதவீத பங்கினை அம்பானி விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் பத்து சதவீத பங்கினை வாங்கப் போவது வேறு யாருமில்லை சமூகவலைதளத்தில் ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தான்.
இது ஏற்கனவே இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது. தற்போது ஜியோ நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றும் பட்சத்தில் இந்தியாவில் தங்களது சந்தையை இன்னும் அதிகமாக்கி கொள்கிறது பேஸ்புக் நிறுவனம்.
இந்த செய்தி பினான்சியல் டைம்ஸ் எனும் பத்திரிக்கையில் ஒரு தகவலாக வெளியாகியுள்ளது.