Vijay Master : விஜய்யின் ‘மாஸ்டர்’ (Vijay Master) பட நடிகர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் கே.பாக்யராஜ். அவரின் மகன் சாந்தனு சில தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
சாந்தனு நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் தனா இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
‘வானம் கொட்டட்டும்’ படத்துக்கு பிறகு நடிகர் சாந்தனு நடித்துள்ள படம் விஜய்யின் ‘மாஸ்டர்’
(Vijay Master). ‘தளபதி’ விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் சாந்தனுவிற்கு மிக முக்கிய வேடமாம்.
‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ‘கைதி’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, விஜய்யின் ‘மாஸ்டர்’ (Vijay Master) படத்தில் நடித்திருக்கும் சாந்தனு, விஜய்யின் ‘போக்கிரி’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்கு தனது மனைவி கீர்த்தியுடன் இணைந்து டிக் டாக் செய்துள்ள வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#Quarantine Leelaigal😂
#Pokiri #UpmaFamily
Back in #TikTok 😅 Follow me there https://t.co/042u5HEN4aWith @KikiVijay and my SIL #Maha
😅😅👍🏻🤪
Ps: don’t ask me where I got the ice cream🤷🏻♂️It’s an old video@TikTok_IN pic.twitter.com/S21SADHCUQ— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) April 2, 2020