Malavika Mohanan Bike Race Video; தல அஜித்தை பாலோ பண்ணும் மாளவிகா மோகனன்: வைரலாகும் பைக் ரேஸ் வீடியோ! அஜித் மாதிரி பைக் ரேஸ் செய்யாவிட்டாலும், ஏதோ அவரைப் போன்று வரவேண்டும் என்ற ஆசையில் பைக் ரேஸ் செய்த மாளவிகா மோகனனின் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாளவிகா மோகனன் பைக் ரேஸ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரம் தல அஜித். இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல. பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபர், சமையலில் வித்தகர், ஒரு மெக்கானிக், பைலட் லைசன்ஸ் பெற்றவர், துப்பாக்கி சுடும் திறமை கொண்டவர் என்று பல திறமைகளைக் கொண்டுள்ளார்.
இன்றைய இளைஞர்களுக்கு அஜித் ஒரு ரோல் மாடலாகவும் திகழ்கிறார். அவரது தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியவற்றால் புகழின் உச்சிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், அஜித் மாதிரி வரவில்லை என்றாலும், அவரது ஸ்டைலை மட்டும் பின்பற்றலாம் என்று அவரைப் போன்று மாளவிகா மோகனன் பைக் ரேஸ் செய்ய கற்றுக் கொண்டு வருகிறார்.
ஆம், அவர் பைக் ரேஸ் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிப்பது என்னவோ விஜய் படம். ஆனால், பாலோ பண்ணுவது தல அஜித்தின் பைக் ரேஸ் என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பைக் ரேஸ் வீடியோ பதிவிட்டுள்ளார்.
அதோடு, உள்ளுக்குள் புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தோடு நான் எடுத்த புதிய முயற்சி தான் இந்த பைக் ரேஸ்.
பைக் ரேஸ் செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட நான் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் டிராக்கில் பைக் ரேஸ் செய்த வீடியோ காட்சி இது.
என்னால், வேகமாக பைக் ரேஸ் செய்யாவிட்டாலும் கூட, முழு வாழ்க்கையில் வழக்கமாக நான் ஓட்டும் பைக்குகளைப் போன்று ஓட்டினேன்.
இந்த நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாளவிகா மோகனனின் பைக் ரேஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரயிருக்கிறது.