மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், எங்கே நடைபெறுகிறது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு வரும் 15 ஆம் தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அது எங்கே நடைபெறுகிறது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இதனால், ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர் (Master). வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி (Master Release Date) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இதற்காக படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
ஏற்கனவே மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் குட்டி ஸ்டோரி லிரிக் (Kutty Story Lyric Video) வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
இதைத் தொடர்ந்து, மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் இசை வெளியீடு, மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் குறித்து அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
மாஸ்டர் இசை வெளியீடு
அதற்கு பதில் கொடுக்கும் வகையில், தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது (Master Audio Launch).
அதன்படி, வரும் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது என்பதை மட்டும் வெளியிட்டுள்ளது. ஆனால், எங்கே நடைபெறுகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
ஆனால், சன் தொலைக்காட்சி நிறுவனம் மட்டும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நேரலை செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
சென்னையா? கோவையா?என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கோயம்புத்தூரில் நடக்கவில்லையாம்.
5 நட்சத்திர ஹோட்டல்
மாறாக சென்னையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் வைத்து மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம்.
கொரோனோ வைரஸ்
உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிகளவில் கூட்டம் கூடாமலிருக்க 5 நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே பிகில் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் ரசிகர்கள் டிக்கெட் வைத்திருந்த நிலையிலும், அரங்கத்திற்குள் வரமுடியவில்லை.
எனினும், கூட்ட நெரிசல்களால் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். இதனால், விஜய்க்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்ததது என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஆதலால், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்துவதற்குப் பதிலாக மிகவும் எளிமையான முறையில் நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது.
விஜய் வெளிநாடு பயணம்
மாஸ்டர் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளிவந்தவுடன் விஜய் குறுகிய கால சுற்றுலாவாக வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
எனினும், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து முறையான அறிவிப்பு வரும் வரையில் எல்லாமே தகவலாகத்தான் இருக்கும்.
விஜய் ஒருநாள் இயக்குநர்
இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குநர் ரத்னகுமார் ஆகியோருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து விஜய் ஒரு இயக்குநராக இருந்து அவர்களை மாஸ்டர் படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.