Meera Mithun; ரஜினி, விஜய்யை சீண்டிப் பார்க்கும் மீரா மிதுன்: டுவீட்டால் சர்ச்சை! கண்ணகி மதுரையை எரித்தது போன்று எனக்கு கோபம் வந்தால் நான் தமிழ்நாட்டையே எரித்துவிடுவேன் என்று மீரா மிதுன் மிரட்டியுள்ளார்.
கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் எனது பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள். சைபர்புல்லிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று மீரா மிதுன் குறிப்பிட்டுள்ளார்.
மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன், தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். எனினும், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
மேலும், பல சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில், தன்னைப் போன்று ஹேர்ஸ்டைல், தோற்றம் என்று மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று த்ரிஷாவை கடுமையாக எச்சரித்துள்ளார்.
இவ்வளவு ஏன், தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான் தான் என்று கூறி வருகிறார். அதோடு, தமிழக அரசை களைத்துவிட்டு, தன்னை முதல்வராக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்து வருகிறார். அதோடு, நடிகர், நடிகைகளை வம்பிழுத்து வருகிறார்.
தமிழ்நாடு என்னை புறக்கணித்தது, அதற்கு நன்றி. அதனால் தான் இபோது தேசிய அளவில், சர்வதேச அளவில் ஒரு சூப்பர்மாடலாக இருக்கிறேன்.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நான் இருக்கிறேன். ஆனால் எனக்கு புரியாதது என்னவென்றால், தமிழ்நாடு என்னைப் பற்றி பேசுவது (துன்புறுத்துவது) அவர்களின் ஒரே வேலையாக வைத்துள்ளது?!
தமிழகம் தமிழர்களுக்கும், இந்துக்களுக்கும் என நான் கருதுகிறேன், ஆனால் மலையாளிகள், கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி, ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் ஏன் இன்னும் என் பின்னால் அலைகிறார்கள்! தனக்கு கோபம் வந்தால் கண்ணகி மதுரையை எரித்தது போன்று தான் தமிழகத்தை எரித்துவிடுவேன். பிரதமர் மோடி தமிழகத்தை அழித்துவிடுங்கள்.
மேலும் “தமிழ்நாடு இறந்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் (கன்னடம்), விஜய் (கிறிஸ்தவர்) என்னை அவதூறு செய்கிறார்களா?!
சைபர் மிரட்டல் பெண் துன்புறுத்தல் சட்டத்தில் அதை சட்டப்பூர்வமாக எடுக்க நான் தயங்க மாட்டேன்! கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்”என்று பதிவிட்டு, பலரையும் எச்சரித்துள்ளார்.
அவரது டுவீட்டுக்கு நெட்டிசன்கள், ரசிகர்கள் என்று பலரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.