Home சினிமா கோலிவுட் ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா!

ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா!

276
0
Roja Drives Ambulance

Roja Driving Ambulance; ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா! நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்று அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ள நிலையில், அவசர கால ஊர்தியை ஓட்ட ரோஜாவிற்கு லைசென்ஸ் உள்ளதா? என்று தெலுங்கு தேசம் கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாக உயர்ந்தவர்.

சூரியன், உழைப்பாளி, வீரா, அதிரடி படை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், ராசைய்யா, மக்கள் ஆட்சி, அரசியல், நாட்டாமை, சுயம்வரம், மிட்டா மிராசு, மாயன், அரசு, சகுனி, மாசாணி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

பின்னர், ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவைத் தொடர்ந்து ஆந்திரா அரசியலில் குதித்தார். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

ஆந்திரா மாநிலத்தில், மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமன்க்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்துள்ளது. இதில், அந்த தொகுதி எம்.எல்.ஏ.ரோஜாவும் கலந்து கொண்டார்.

அப்போது, ஆம்புலன்ஸில் ஏறி, வாகனத்தை ஓட்டத் தொடங்கினார். நகரி வரை கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் தூரம் வரை ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்று சர்ச்சையில் சிக்கியுள்ளார். அப்போது அவர் முகக்கவசமும் அணியவில்லை. ஆம், தெலுங்கு தேசம் கட்சியினர் ரோஜாவை விமர்சனம் செய்துள்ளனர்.

ரோஜா சாகசம் செய்வதற்காக இது போன்று செய்துள்ளார். அவசர கால ஊர்தியை ஓட்டுவதற்கு அவருக்கு லைசென்ஸ் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Previous articleடுவிட்டரில் டிரெண்டாகும் KeerthyBDayGalaIn100D ஹேஷ்டேக்!
Next articleமின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி: சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here