விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.
ஆர்ஜே செந்தில், டாக்டர் மற்றும் மாயனாக இரு வேடத்திலும் ரக்ஷா ஹோலா, ரேஷ்மி ஜெயராஜ் நடித்திருக்கும் இந்த சீரியலில் பெரிய கதைகள் எதுவும் கிடையாது.
இந்த தொடருக்கு பக்கபலமாய் திரைக்கதை மட்டுமே மாயனும் அவரது நண்பர் ரைட்டுடன் செய்யும் காமெடிகள் இந்த தொடரில் அதகளமே.
மாயனும் அவரது மனைவி தேவிக்கும் வரும் காதல் காட்சிகள் சண்டைக் காட்சிகள் இத்தொடர்க்கு கூடுதல் பலம்.
இவர்கள் இன்றைய எபிசோடில் இருக்கிறார்கள் என்றால் அன்று போரடிக்காமல் பார்க்கலாம். அந்தளவுக்கு இவர்களது திரைக்கதை சுறுசுறுப்பாக இருக்கும்.
மாயன் பேச்சிலும், நடிப்பிலும், காமெடியிலும் அசத்தி வருகிறார். இவருக்கு எதிர்மறையாக நல்ல கேரக்டராக இருந்தாலும் கூட டாக்டர் கதைகள் கொஞ்சம் போராகவே செல்கிறது.
டாக்டரின் மனைவியாக தாமரையின் கதாபாத்திரம் இருந்து வருகிறது. இவர்களின் காதல் காட்சிகளை விட மாயன் காதல் காட்சிகள் மக்களுக்கு பிடித்த தாகவே இருக்கிறது.
இந்த சீரியலின் ப்ரோமோ யூடியூபில் போட்டவுடனே பத்திலிருந்து பதினைந்து லட்சம் பார்வையாளர்களை கடக்கிறது. சில சமயங்களில் 20லட்சமும் செல்கிறது
இந்த தொடரில் பெரிதாக வில்லன்கள் என்று யாரும் கிடையாது. ஒரே வில்லன் சித்தப்பு என்கிற லிங்கம்.
இந்த தொடரின் வில்லன் என்றாலும் மாயன் உடன் செய்யும் காமெடிகள், பல இடங்களில் அசிங்கப்படும் பொழுது மக்களை பெரிதாகவே சிரிக்கவும் வைக்கிறார்.
தொடர் ஆரம்பம் மனதிலிருந்து இவர் ஒருவர் மட்டுமே வில்லனாகவும் இருந்து வருகிறார் இந்த தொடருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.
இந்த தொடர் சில வாரங்கள் சுறுசுறுப்பில்லாமல் சென்றாலும். மாயன் என்னும் ஒரு கதாபாத்திரம் நம்மை இந்த தொடரைப் பார்க்க ஆர்வம் கொள்ள வைக்கிறது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பமான இந்த தொடர் 579 எபிசோடுகளை கடந்து இருக்கிறது.
இந்த தொடர் ரசிகர்களை ஈர்க்க முக்கிய காரணமே மாயன் மற்றும் தேவியின் கதாபாத்திரங்களே.
இதனாலோ என்னவோ இவர்களின் காதல் காட்சிகள் தொடரில் அதிகமாகவே இருக்கும்.
மாயன் முதலில் தனது சகோதரருக்கு செய்யும் துரோகங்கள். பின்பு மனம் மாறுவது என முதலில் நாடகம் மெல்லவே கடந்தது.
பின்பு ரசிகர்கள் பல்சை பிடித்து காதல், காமெடி என விறுவிறுப்பாக செல்கிறது.
தொடரில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் மாயன் அங்கு நல்லவனாக வந்து நிற்பது ரசிகர்களின் ஆதரவை தெரிகிறது.
டாக்டர் கதாபாத்திரம் அம்மாவுக்காக விட்டுக் கொடுப்பதும், அம்மாவுக்காக மனைவியை வெளியில் அனுப்புவதும் என அம்மாவின் பிள்ளையாக வந்தார்.
பின்பு டாக்டரின் அம்மாவே அவரை புரிந்து கொண்டு டாக்டரை அவரின் மனைவியோடு சேர்த்து வைக்க முயற்சி செய்வதெல்லாம் அருமையாகவே இருந்தது.
இந்த தொடரில் இரு நாயகிகளுக்கும் ஒரு தந்தை தான். அவருக்கு இரு மனைவிகளின் பிள்ளைகளாக நாயகிகள் வருகிறார்கள்
சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் அழகு சீரியல் இருக்கு சமமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் இந்த நாம்-இருவர்-நமக்கு-இருவர் தொடர்.
ஆனால் இது இன்றைய இளைஞர்களையும் கவர்ந்து ஹாட்ஸ்டாரில் அதிக பார்வையாளர்களை தொடுகிறது.
இதற்காகவே இதை இயக்கும் இயக்குனர்கள் செல்வனுக்கு நாம் ஒரு பாராட்டை தெரிவிக்கலாம்.