Home சினிமா கோலிவுட் இப்படியொரு டிக் யாருமே பண்ணமாட்டாங்க: நயன்தாரா விக்னேஷ் சிவன் நியூ வீடியோ!

இப்படியொரு டிக் யாருமே பண்ணமாட்டாங்க: நயன்தாரா விக்னேஷ் சிவன் நியூ வீடியோ!

786
0
Nayanthara Latest Video

Nayanthara; இப்படியொரு டிக் யாருமே பண்ணமாட்டாங்க: நயன்தாரா விக்னேஷ் சிவன் நியூ வீடியோ! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ஆங்கில பாடல் ஒன்றிற்கு டிக் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ்க்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இன்னும் மருந்து கண்டுப்பிடிக்காத நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் (Corona Virus) பரவுவதை தடுக்க நேற்று ஒருநாள் மட்டும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

இதையடுத்து, நம்மை பாதுகாத்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று மாலை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பொதுமக்கள் என்று பலரும் கைதட்டி ஆரவாரம் செய்து மருத்துவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வரும் 31 ஆம் தேதி வரை 19 மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மால்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ஒரு ஆங்கில பாடலுக்கு டிக் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பதிவிட்டதோடு, சுய தனிமை மற்றும் தரமான நேரம் QuarantineLife என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கைதட்டியதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதில் காதலி நயன் தாராவின் கையோடு தனது கையை சேர்த்து பதிவிட்ட புகைப்படம் செம்மயாக வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரது கையிலும் ஒரே மாதிரியான மோதிரம் இடம்பெற்றிருந்தது. நயன் தாராவிற்கு இடது கையிலும், விக்னேஷ் சிவனுக்கு வலது கையிலும் அந்த மோதிரம் இருந்தது.

ஆதலால், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்குமோ என்று ரசிகர்கள் கொஞ்சம் ஆவலோடு கேள்வி எழுப்புகின்றனர்.

Nayanthara And Vignesh Shivan hand

SOURCER SIVAKUMAR
Previous articleஊரடங்கு உத்தரவு: மீறி வெளியில் சுத்துவோரை கைது செய்ய அரசு முடிவு
Next articleRealme Narzo 10: மார்ச் 26-ல் இந்தியாவில் அறிமுகமாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here