Nayanthara Mookuthi Amman; நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியீடு! அம்மனாக நடித்து வரும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவரும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
அண்மையில், ரஜினியுடன் இணைந்து நடித்த தர்பார் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
மூக்குத்தி அம்மன்
இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து, ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில், இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன் தாரா அம்மனாக நடித்து வருகிறார்.
Mookuthi Amman First Look
கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நயன்தாரா தலையில் கிரீடம் வைத்திருப்பது போன்றும், மூக்குத்தி அணிந்திருப்பது போன்றும், அம்மனுக்கு பிடித்த நிறமான மஞ்சள், பச்சை நிறங்களில் சேலை அணிந்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு முன்னதாக, விஜயசாந்தி, மீனா, ரோஜா, கேஆர் விஜயா, பானுப்ரியா என்று மாஸ் நடிகைகள் பலரும் அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலங்களில் உருவாக்கப்பட்ட பக்தி படங்களில் ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பல நடிகைகள் சக்தி, பார்வதி போன்று அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரதம் இருந்த நயன்தாரா
மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாரா விரதம் இருந்துள்ளார். மேலும், அவர் அசைவ உணவுகளையும் சாப்பிடவில்லையாம். முழுக்க முழுக்க தன்னை படத்திற்காகவே அர்ப்பணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்காக அவர் அதிகளவில் சம்பளமும் வாங்கியுள்ளாராம். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு புகைப்படங்கள்
தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவரும் வகையிலும், அவர்களிடத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகளவில் ஏற்படுத்தும் வகையிலும், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் ஊர்வசி, மௌலி, அஜய் கோஷ், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார்.