Nikhila Vimal; கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசு நடத்தும் கால் சென்டரில் நடிகை நிகிலா விமல் பணியாற்றி வருகிறார்.
நடிகை நிகிலா விமல் மக்களுக்கு உதவும் வகையில் அரசு நடத்தும் கால் சென்டரில் பணியாற்றி வருகிறார்.
சசிகுமார் நடிப்பில் வந்த வெற்றிவேல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிகிலா விமல். இப்படத்தைத் தொடர்ந்து கிடாரி, பஞ்சுமிட்டாய், ஒன்பது குழி சம்பத், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழைத் தவிர மலையாளம் மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், லாக்டவுன் ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த இந்லையில், நடிகை நிகிலா விமல், சமூக பணிகளில் இறங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
ஆம், லாக்டவுன் உத்தரவு காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொடுப்பதை ஒருங்கிணைக்க கேரள மாநிலம் கண்ணூரில் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது.
அந்த கால் சென்டரில் வேலை பார்க்க தன்னார்வலர்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இதையறிந்த நிகிலா விமல், உடனடியாக அந்த கால் சென்டரில் சேர்ந்து வேலை பார்க்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், மக்களுக்கு உதவக்கூடிய கால் சென்டரில் பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நிகிலா விமலின் இந்த செயலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.