Home Latest News Tamil Minsara Kanna Parasite: பாராசைட், மின்சார கண்ணா படத்தின் காப்பியா?

Minsara Kanna Parasite: பாராசைட், மின்சார கண்ணா படத்தின் காப்பியா?

498
0
பாராசைட் மின்சார கண்ணா parasite copy of minsara kanna தயாரிப்பாளர் PL தேனப்பன்

Minsara Kanna Parasite: பாராசைட், மின்சார கண்ணா படத்தின் காப்பியா?  மின்சார கண்ணா படத்தின் தயாரிப்பாளர் PL தேனப்பன், பாராசைட் படக்குழு மீது வழக்கு தொடர உள்ளார்.

ஆஸ்கார் விருது 2020

2020-ஆம் ஆண்டின் ஆஸ்காரில் நான்கு விருது வாங்கிய கொரியன் திரைப்படம் பாராசைட் (Parasite). சிறந்த படத்திற்கான விருதையும் திரைக்கதைக்கான விருதையும் பெற்று உலக சாதனை படைத்தது.

தமிழில் 1999-ல் வெளிவந்த மின்சார கண்ணா படத்தின் காப்பிதான் பாராசைட் என சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

Minsara Kanna Parasite என்று ட்விட்டர், கூகுள் என உலகம் எங்கும் உள்ளவர்கள் தேடத்துவங்கி விட்டனர்.

கொரியன் படத்தில் இருந்து தமிழில் காப்பி அடித்த காலம் மாறி, தமிழில் இருந்து கொரியன் படம் காப்பி அடிக்கப்பட்டு உள்ளது.

இதில் சிறப்பு என்னவெனில், பாராசைட் படம் சிறந்த படமாக விருது வென்று உள்ளது. இதுவரை வேற்றுமொழி படங்கள் சிறந்த படங்களாக ஆஸ்கர் விருது வென்றது இல்லை.

ஒரு காப்பி அடிக்க படம் ஆஸ்கார் விருது வெல்வதா? என்கின்ற அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொதித்து எழுந்து உள்ளனர்.

பாராசைட் கதை (Parasite Movie Story)

போங்க் ஜூன் ஹோ இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான பாராசைட் திரைப்படம் தொடக்கம் முதலே நல்ல விமர்சனங்களைப் பெற்று வந்தது.

இதன் கதையானது சேரியில் (Slum) வாழும் ஏழைக்குடும்பம் மொத்தமும் தங்களுடைய வருமானத்திற்காக ஒரு பணக்காரக் குடும்பத்தில் வேலைக்கு சேர்வார்கள்.

இதில் அந்த ஏழைக்குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தாங்கள் வேலை செய்யும் வீட்டில் ஒருவர் மற்றொருவரை தெரியாததைப் போல் நடிப்பார்கள்.

முதலாளித்துவமும் ஏழை மற்றும் பணக்கார மக்களின் வேறுபாட்டையும் மிக அழுத்தமாக எடுத்துரைக்கும் ஒரு எதார்த்தமான வாழ்வியல் திரைப்படம் இது.

மின்சார கண்ணா கதை (Minsara Kanna Movie Story)

கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் விஜய், ரம்பா மற்றும் குஷ்பு முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

ஹீரோ தன்னுடைய காதலியின் குடும்ப சம்மதத்தை பெறுவதற்காக தன் மொத்த குடும்பத்தையும் ஹீரோயின் வீட்டில் வேலைக்குச் சேர வைப்பார்.

இதிலும் ஒவ்வொருவரும் ஏழைபோல் நடித்தும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல் காட்டிக்கொள்வார்கள்.

மேலும் ஹீரோயின் அக்கா குஷ்பு கதாப்பாத்திரம் ஆணிடம் ஏமாற்றம் அடைந்து ஆண்களை வெறுக்கும் கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருப்பார்.

இறுதியில் ஹீரோ ஹீரோயின் இணைந்தார்களா? ஆண்களை வெறுக்கும் குஷ்பு இறுதியில் மனம் மாறினாரா? என்பது தான் க்ளைமேக்ஸ்.

இந்த இரண்டு படத்தின் கதையின் ஒரு சிறு பகுதி ஒற்றுமையாக இருந்தாலும் படம் இறுதியில் நமக்குச் சொல்ல வரும் கருத்து வெவ்வேறு.

தயாரிப்பாளர் PL தேனப்பன் ஆவேசம்

பாராசைட் படம் ஆஸ்கார் வென்றவுடன் நம்முடைய இந்திய ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இது இரண்டும் ஒரே கதை காப்பி என ஷேர் செய்தனர்.

இதன் பிறகு இந்த படத்தை பார்த்த மின்சார கண்ணா படத்தின் தயாரிப்பாளர் கூறியதாவது, “நான் பாராசைட் படத்தை பார்த்து விட்டேன்.

இது இரண்டும் ஒரே கதையே. இது தொடர்பாக நான் சர்வதேச வழக்கறிஞர் மூலம் பாராசைட் தயாரிப்பு குழுவின் மீது வழக்கு தொடர்வேன்” என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் KS ரவிகுமார் கூறியதாவது, “நானும் பாராசைட் படத்தைப் பார்த்தேன். இரண்டு கதைகளிலும் சில ஒற்றுமைகள் உள்ளன. இந்தக் கதைக்கு ஆஸ்கார் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Previous articleஹாப்பி செயலி (Hobbi App): அறிமுகம் செய்த பேஸ்புக்
Next articleகரக் மொறுக் சாப்பிடும் சத்தம்: ஏன் சிலரை கோபப்படுத்துகிறது
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here