ஹாப்பி செயலி (Hobbi App): அறிமுகம் செய்த பேஸ்புக். பின்டெரெஸ்ட் (Pinterest) ஆப்பிற்கு போட்டியா? ஆண்ட்ராய்டு ஆப் (android app) எப்போது வரும்?
பேஸ்புக் நிறுவனம் பின்டெரெஸ்ட் (Pinterest) மாதிரி போட்டோ மாற்றும் வீடியோ ஷேர் செய்யும் ஹாப்பி செயலி (Hobbi App) என்னும் செயலியை சத்தமில்லால் அறிமுகப்படுத்தியது.
ஹாப்பி ஆண்ட்ராய்டு ஆப் எப்போது வரும்?
தற்போது இந்த செயலி ஐபோன்களில் மட்டுமே இருக்கிறது. இன்னும் சில காலங்களில் ஆண்ட்ராய்டு போன்களில் வார வாய்ப்பு இருக்கிறது.
மேலும் இது தற்பொழுது 84 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்டெரெஸ்ட் (Pinterest) செயலி
Pinterest App பொதுவாக மக்களின் கிரியேட்டிவிட்டி செயல்கள் மற்றும் பிற தொழில் சார்ந்த புகைப்படங்களும் வீடியோக்களும் பகிரப்படும்.
எடுத்துக்காட்டாக சமையல், ஃபேஷன், ஓவியம், ஃபிட்னஸ், ஹைர்ஸ்டைல் மற்றும் வீட்டு அலங்காரம் போன்ற தகவல்கள் பகிரப்படும்.
பேஸ்புக் ஆப்
முகநூல் நிறுவனம் தொடர்ச்சியாக புதுப்புது செயலிகளை ரிலீஸ் செய்து கொண்டே வருகிறது.
சென்ற வருடம் bump என்னும் சேட் செய்யும் செயலி, Aux என்னும் மியூசிக் செயலி தற்போது hobbi செயலியை அறிமுகம் செய்துள்ளது.
whale என்னும் மீம் எடிட் செய்யும் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியது. பிறகு சிறிது காலங்களிலயே அதை ஷட்டவுண் செய்துவிட்டது.