Home ஜோதிடம் 15/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

15/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

511
0
15/2/2020 ராசிபலன் இன்றைய தின ராசிபலன் Horoscope Tamil சிம்மம் கடகம்

15/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகக் காணப்படுகிறது. இதுவரை இருந்த கல்யாணத்தடை விலகி சுபமுண்டாகும்.

அவ்வப்போது மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். தாயாரின் உடல்நலத்தைப் பேணுவது அவசியமாகும்.

அதிர்ஷ்ட எண்: 7அதிர்ஷ்ட நிறம்: ஊதா வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

மிகவும் தனவரவு மிகுந்த நாளாகக் காணப்படுகிறது. ராசிநாதன் உச்சம் பெற்றுள்ளதால் எதிலும் வெற்றி வாகை சூடலாம்.

காது சம்மந்தப்பட்ட கோளாறு வத்து நிவர்த்தியடையும். பொறுமையாக எதிலும் ஈடுபடுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மிதுன ராசிபலன்

மிகவும் தையரிமான நாளாகக் காணப்படுகிறது. பாக்கிய நாதன் உச்சத்தில் இருப்பதால் பூர்வ புண்ணிய பலன் கூடும். கோபத்தைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு வண்ணம்

கடகம் ராசிபலன்

சுபமான நாளாகக் காணப்படுகிறது. மனைவி வழி உறவினர்களிடையே பகைமை கொள்ளக் கூடாது.

மனைவியை அன்போடு அனுசரனையாக நடந்து கொள்வது அவசியமாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

சிம்மம் ராசிபலன்

ராசியிலேயே சந்திரன் உலவுவதால் சிறு சிறு மனக் குழப்புங்கள் வரக்கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் அதிகாரம் ஓங்கும். தங்கு தடையற்ற லாபம் பெருகும் நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

கன்னி ராசிபலன் 

சந்திரன் பன்னிரெண்டில் உலவுவதால் சற்று விரயம் இருக்கும். செலவினங்களைக் குறைப்பது அவசியம்.

யோகமான நாளாகக் காணப்படுகிறது. தந்தை, தாய் வழி உறவினர்களின் மகத்துவமான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண்: 2

துலாம் ராசிபலன்

மிகவும் அற்புதமான ஆசீர்வாதமான நாளாகக் காணப்படுகிறது. தெய்வங்களின் அனுக்கிரகம் மிகுந்த நாளாகக் காணப்படுகிறது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. இடது காலில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. மூளை சம்மந்தப்பட்ட பிரச்சினை ஏற்படலாம் மருத்துவ சிகிச்சை தேவை.

அதிர்ஷ்ட நிறம் : நீல வண்ணம். அதிர்ஷ்ட எண் : 2

விருச்சிக ராசிபலன்

பலரும் ஏறெடுத்துப் பாராட்டும் வண்ணம் பல செயல்கள் செய்து வெற்றி பெறுவீர்கள். நிதானமாக செயல்கள் செய்து புகழ் பெறுவீர்கள்.

புத்துணர்வோடு செயல்படும் நாள். சிலருக்கு தண்ணீரில் கண்டம் ஏற்படலாம். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

தனுசு ராசிபலன்

மிகவும் பாக்யமான நாளாகக் காணப்படுகிறது. வரசித்தி விநாயகரை வழிபடுவது வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்.

தவறான கருத்துக்களைச் சொல்ல வேண்டாம். ஏதேனும் சொல்லப் போய் வம்பில் முடியும். மாணவர்கள் கவனமுடன் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

மகரம் ராசிபலன் 

சந்திரன் எட்டில் இருப்பதால் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. தனிநபர் தாக்குதல் செய்யாதிருப்பது மிக அவசியம். நம்பி மோசமடையும் நாளாகக் காணப்படுகிறது. எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம், எண் : 9

கும்ப ராசிபலன்

சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். குழந்தைகளிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீடு விற்றல், பத்திரம் பதிவு செய்தல் போன்றவற்றில் கவனம் தேவை. நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மீனம் ராசிபலன் 

தெய்வத்தை வழிபட தீமைகள் விலகும் நாள். கடன் கொடுத்து வசூலிக்க கஷ்டப்படும் நாள். பண விவகாரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பணம் கொடுத்து ஏமாந்து விடும் நாளாகக் காணப்படுகிறது. ஸ்கின் நோய்கள் வந்து போகலாம்.

15/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleகரிநாள் என்றால் என்ன? அதில் உள்ள அறிவியல் உண்மைகள்
Next articleஹாப்பி செயலி (Hobbi App): அறிமுகம் செய்த பேஸ்புக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here