Home சினிமா கோலிவுட் 99 மீனவர்களை மீட்டெடுக்க பவன் கல்யாண் வேண்டுகோள்!

99 மீனவர்களை மீட்டெடுக்க பவன் கல்யாண் வேண்டுகோள்!

0
305
Pawan Kalyan Letter

Pawan Kalyan; ஆந்திரா மீனவர்களை மீட்டெடுக்க தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மீனவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வெளிநாடுகள் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வருவதற்கோ அல்லது மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியேறும் போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து முதல், எந்த சேவையும் இல்லை. கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா திரையரங்குகள் என்று அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதில், ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபெர்ரா மண்டலத்தின் கோலகண்டி என்ற கிராமத்திலிருந்து மீன்பிடிக்க  தமிழக கடற்கரை எல்லைக்கு சென்ற 99 மீனவர்கள் சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

போதிய தங்கும் வசதி மற்றும் உணவு இன்றி அவர்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இது குறித்து செய்வதறியாது தவித்து வருகிறார்கள் என ஜனசேனா தொண்டர்கள் மூலம் இந்த குறித்து அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த குறித்து அறிந்து உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here