Home சினிமா கோலிவுட் விஜய் டிவி புகழ் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே பர்த்டே டுடே!

விஜய் டிவி புகழ் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே பர்த்டே டுடே!

470
0
Priyanka Deshpande

Priyanka Deshpande; விஜய் டிவி புகழ் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே பர்த்டே டுடே! விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி விஜே பிரியங்கா இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விஜே பிரியங்கா தேஷ்பாண்டே இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி பிறந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அதன் பிறகு கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தார்.

சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்த பிரியங்கா மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்துள்ளார். எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். ஆனால், மீடியா துறையில் போராடி வந்த பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில ஆண்டுகள் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில், சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்துள்ளார்.

மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில விழா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

சுட்டி டிவியிலும், நிகழ்ச்சி தொகுத்து வழங்கியுள்ளார். இவரது பிடித்த ஷோவான மாமி டே அவுட் என்ற நிகழ்ச்சி கருதப்படுகிறது. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்தார்.

சினிமா காரம் காஃபி என்ற நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கினார். ஏர்டெல் சூப்ப சிங்கர் ஜூனியர் சீசன் 4, ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 5, கிங்ஸ் ஆப் டான்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் முக்கிய தொகுப்பாளினிகளில் பிரியங்கா தேஷ்பாண்டே முக்கியமானவராக கருதப்படுகிறார்.

இந்த நிலையில் இன்று தனது 30 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு ரசிகர்களும் வாழத்து தெரிவித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleலக்னோவில் மே 30 வரை 144 தடை நீட்டிப்பு ; இறைச்சி, மதுபான கடைகளுக்கும் தடை.
Next articleதமிழ்நாடு அரசு ஊரடங்கை முழுவதும் தளர்த்துவதாக இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here