Home சினிமா கோலிவுட் தலைவரின் ஆசியுடனும், அனுமதியுடனும் ரெடியான ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 கன்பார்ம்!

தலைவரின் ஆசியுடனும், அனுமதியுடனும் ரெடியான ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 கன்பார்ம்!

399
0
Chandramukhi 2

Chandramukhi 2; தலைவரின் ஆசியுடனும், அனுமதியுடனும் ரெடியான ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 கன்பார்ம்! ரஜினிகாந்தின் ஆசியுடனும், அனுமதியுடனும் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளதாக ராகவா லாரனஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன் தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு ஆகியோர் பலர் நடித்த படம் சந்திரமுகி. இந்தப் படத்தை சிவாஜி புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் ராம்குமார் கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை அனைவருமே கொண்டாடினர். சந்திரமுகி 800 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியது.

இந்த நிலையில், சந்திரமுகி 2 படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.

சந்திரமுகி 2 படத்தையும் பி வாசு இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தலைவரின் ஆசியுடனும், அனுமதியுடனும் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, உங்கள் அனைவருக்கும் நான் ஒரு சந்தோஷமான செய்தியை பகிர்கிறேன்.

எனது அடுத்த படங்களில் ஒன்று தலைவரின் படமான சந்திரமுகி 2. தலைவரின் அனுமதியுடனும், ஆசியுடனும் இந்தப் படத்தில் நடிப்பது என்பது எனது அதிர்ஷ்டம்.

இயக்குநர் பி வாசு இந்தப் படத்தை இயக்குகிறார். எனது அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

மேலும், இந்தப் படத்திற்காக தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையான ரூ.3 கோடியை கொரோனா நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ராயபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு ரூ.75 லட்சம்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்

நடன கலைஞர்கள் யூனியனுக்கு ரூ.50 லட்சம்

ஃபெப்சி அமைப்புக்கு ரூ.50 லட்சம்

உடல் ஊனமுற்றோருக்கு ரூ.25 லட்சம்

என்று பிரித்து பிரித்து வழங்கியுள்ளார். இறுதியில் சேவையே கடவுள் என்று சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here