Raghava Lawrence; தூய்மை பணியாளர்களுக்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி! கொரோனா பாதிப்பு நிவாரண நிதிக்கு முதலில் ரூ.3 கோடி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25 நிதியுதவி வழங்கியுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25 நிதியுதவி வழங்கியுள்ளார்.
நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிதியுதவியாக ரூ.3 கோடி கொடுத்துள்ளார்.
மேலும், பலர் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும், தன்னார்வலர்கள் மூலமாக அவர்களுக்கு உதவ இருந்தார் ராகவா லாரன்ஸ்.
இந்த நிலையில், தன்னார்வலர்கள் நேரடியாக எந்த உதவியும் செய்யக்கூடாது என்று அரசு அறிவித்தது. இது குறித்து ராகவா லாரன்ஸ் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
அதில், இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், அரசால் நேரடியாக அனைவருக்கும் உதவி செய்ய முடியாது.
அந்த வகையில், தன்னார்வலர்கள் மீண்டும் உதவி செய்யும் வகையில் அரசு விதித்த தடையை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது தூய்மை பணியாளர்களுக்கு உதவும் வகையில் ரூ. 25 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆம், தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்காக வாங்கும் சம்பளத்தில் இருந்து ரூ.25 லட்சம் பணத்தை கொடுத்துவிடும் படி தயாரிப்பாளர் கதிரேசனிடம் கூறியுள்ளார்.
இது குறித்து பைவ் ஸ்டார் புரோடகஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் கூறுகையில், லாரன்ஸுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல அழைத்த போது அவர் சம்பளத்தில் இருந்து ரூ.25 லட்சம் தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கு மூலமாக கொடுத்துவிடுங்கள் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தூய்மை பணியாளர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கின் விவரங்களை வாட்ஸப் எண் 6382481658 க்கு அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.