Rajinikanth FEFSI Workers; கொரோனா வைரஸ்: ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி! சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட உலகநாடுகளை தாக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பால் நாள் தோறும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 19 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து சினிமா, (சின்னத்திரை, வெள்ளித்திரை) படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டன.
இதன் காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அனைத்து தொலைக்காட்சி மற்றும் அதன் உரிமையாளர்கள் என்று பலருக்கும் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி ஒரு வேண்டுகோள் வைத்தார்.
சினிமா வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால், அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும்.
10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால், ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் 1250 ரூபாய் என கணக்கு வைத்தால் கூட ரூ.2 கோடி ஆகிறது.
கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர், வாழ்வு அளிப்பீர், நிதி அளிப்பீர் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.
ஆர்.கே. செல்வமணி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முதலாவதாக சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் உதவ முன்வந்துள்ளனர். ஆம், தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், சிவகுமாரின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
சேலம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10 மூட்டை அரிசியை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் பார்த்திபன் 25 கிலோ கொண்ட 250 அரிசி மூட்டை வழங்கியுள்ளார். ஜெகன் ரூ.5000, ஜீனியஸ் பட நடிகர் ரோஷன் ரூ.17,000, இயக்குநரும், நடிகருமான மனோபாலா அரிசி மூட்டையும் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த அதிகபட்சமாக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விஜய் சேதுபதி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவசாயத்தை கையிலெடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் 150 (25 கிலோ) அரிசி மூட்டை பெப்சி அலுவலகத்திற்கு மேனேஜர் கஃபர் மற்றும் ராஜூ உதயலி ஆகியோரது மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தை அட்வான்ஸ் தொகையாகவும் கொடுத்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து சினிமா துறையில் இருக்கும் மற்ற நடிகர், நடிகைகளும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth – 50Lakhs
Vijay Sethupathi – 10 Lakhs
Siva Karthikeyan – 10 Lakshs
Suriya & Family – 10 Lakhs
Harish Kalyan – 1 Lakhs
நடிகர்கள் | நிதியுதவி | அரிசி மூட்டை |
கார்த்தி, சூர்யா, சிவகுமார் | ரூ.10 லட்சம் | |
சிவகார்த்திகேயன் | ரூ.10 லட்சம் | |
பார்த்திபன் | 250 மூட்டை | |
மனோபாலா | அரிசி மூட்டை | |
ஜெகன் | ரூ.5000 | |
ஜீனியஸ் பட நடிகர் ரோஷன் | ரூ.17,000 | |
விஜய் சேதுபதி | ரூ.10 லட்சம் | |
ரஜினிகாந்த் | ரூ.50 லட்சம் | |
விஜய் மக்கள் இயக்கம் – சேலம் | 10 மூட்டை | |
ஹரிஷ் கல்யாண் | ரூ.1 லட்சம் | |
பிரகாஷ் ராஜ் | 150 மூட்டை |