Home சினிமா கோலிவுட் #சத்தியமா_விடவே_கூடாது: கோபத்தில் கொந்தளித்த ரஜினிகாந்த்!

#சத்தியமா_விடவே_கூடாது: கோபத்தில் கொந்தளித்த ரஜினிகாந்த்!

303
0
Rajinikanth Sathankulam Issue

Rajinikanth; #சத்தியமா_விடவே_கூடாது: கோபத்தில் கொந்தளித்த ரஜினிகாந்த்! சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் கோபமாக பதிவிட்ட பதிவு டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

#சத்தியமா_விடவே_கூடாது என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள போலீசார் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக நேற்று சிசிடிவி கேமரா ஆதாரம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ரஜினிகாந்த், அண்மையில், ஜெயராஜ் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும், அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தற்போது டுவிட்டரில், #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக் உடன், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும்,

காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, #சத்தியமா_விடவே_கூடாது என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here