Sakshi Agarwal; 59 Appகளுக்கு தடை: மத்திய அரசுக்கு சாக்ஷி அகர்வால் நன்றி! டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்பட 59 Appகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடிகை சாக்ஷி அகர்வால் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு நடிகை சாக்ஷி அகர்வால் நன்றி கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கிறார். தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, டிக் டாக்கிலிருந்து விலகிய சாக்ஷி அகர்வால், சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்தப் போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் முடிவு செய்துள்ளாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மத்திய அரசு, ஹலோ, டிக் டாக், ஷேர்-இட், லைக்கீ, நியூஸ்டாக் உள்ளிட்ட 59 Appகளுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தற்போது சாக்ஷி அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும், இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.