Home சினிமா கோலிவுட் Rajinikanth: அன்பு, அமைதி, ஒற்றுமையே நாட்டின் பிரதான நோக்கம்: ரஜினிகாந்த்!

Rajinikanth: அன்பு, அமைதி, ஒற்றுமையே நாட்டின் பிரதான நோக்கம்: ரஜினிகாந்த்!

273
0

நாட்டில் அன்பு, அமைதி, ஒற்றுமையே பிரதான நோக்கம் என்றும், அமைதியை நிலைநாட்ட தனது தகுதிக்குட்பட்ட அனைத்தையுமே செய்யத் தயாராக இருப்பதாக  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் உச்சநட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் களமிறங்க தயாராக உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது ஆன்மீக அரசியல் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதன்பிறகு அரசியல் குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனால், பலரும் பலவிதமாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று தனது இல்லத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதையடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைச் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், தர்பார் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீர்ஷ், கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். வரும் அக்டோபர் 22 ஆம் தேதி அண்ணாத்த படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 படம் அண்மையில் அறிவிப்பு வெளியானது. அதில், தலைவர்169 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கயிருப்பதாகவும், மார்ச் முதல் வாரத்தில் 5 ஆம்  தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது.

அதோடு, படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முடிந்த பிறகு ரஜினிகாந்த் தீவிரமாக அரசியலில் கால்பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articlePonmagal Vandhal: பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இன்று வெளியீடு!
Next articleINDvsNZ 2nd Test; 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூ சிலாந்து வெற்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here